பட்டப்பகலில் உலா வரும் சிறுத்தை - அச்சத்தில் மக்கள்
வட்டவளை - லொனெக் கறுவா தோட்டப் பகுதியில் பட்டப்பகலில் சிறுத்தையொன்று நடமாடியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த தோட்டத்தில் தோட்ட முகாமையாளரின் விடுதிக்கு அருகாமையில், கற்குகைகள் நிறைந்த பகுதியில் இந்த சிறுத்தை நடமாடியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அச்சமின்றி பயணிக்கக்கூடிய வகையில்
குறித்த பகுதியில் சிறுத்தை நடமாடுவதை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களது கையடக்கத் தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளனர்.

சிறுத்தை நடமாடியதாக தெரிவிக்கப்படும் பகுதிக்கு அருகிலுள்ள ஒற்றையடிப் பாதை மற்றும் படிக்கட்டுகள் ஊடாக ஆசிரியர்கள், தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தினமும் பயணித்து வருகின்றனர்.
இதனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறுத்தையின் தாக்குதலுக்கு மக்கள் உள்ளாகக்கூடிய அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த வனவிலங்கு அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து, மக்கள் அச்சமின்றி பயணிக்கக்கூடிய வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.