இலங்கைக்காக சீனாவிடம் மனோ கணேசன் முன்வைத்த கோரிக்கை
பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் இலங்கையை இணைத்துக்கொள்வதற்கு சீனா உதவவேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganeshan) கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் (Sajith Premedasa) இணைந்து அவர், இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் துணை அமைச்சர் சன் ஹையனை நேற்று (27.04.2024) சந்தித்த போதே குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கட்சிகளின் பிரதிநிதிகள்
ஆசியாவை மையமாகக் கொண்ட உலகில் இன்று சீனா (China) முக்கியப் பங்காற்றுகிறது.
எனவே, பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய ஐக்கிய அரபு ராச்சியம் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துக்கொள்வதற்கு இலங்கைக்கு சீனா உதவ வேண்டும் என்று மனோ கணேசன் கோரியுள்ளார்.
முன்னதாக, சீனப் பிரதிநிதிகள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் தேசிய மக்கள் சக்தி போன்ற கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |