படையினரின் சம்மதத்துடன் வடக்கில் எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை - அமைச்சர் அறிவிப்பு
வட மாகணத்தில் படையினர் மற்றும் அரசின் கீழ் உள்ள மக்களின் காணிகளை தேவையின் அடிப்படையில் விடுவிக்க முடியுமென அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
படையினரின் சம்மதத்துடன் இதற்கான நவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அறுபது மாதங்கள் பணியாற்றுவதற்காக எமது அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசாங்கங்கள் வழங்கிய நிதியை விடவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது அரசாங்கம் அதிக நிதியை வழங்கியுள்ளது.
மீதப்படுத்தப்பட்ட பணம்
தித்வா சூறாவளியால் பாதிப்புற்ற மக்களுக்கும் அதிகளவான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எமது அரசாங்கம் பணத்தினை மீதப்படுத்தியதாலேயே இந்நிதியை வழங்க முடிந்தது.

வறிய மக்களின் நிலைமையை அறிந்து கொள்ளும் மனநிலையிலேயே எமது ஜனாதிபதி செயற்படுகிறார். தித்வா புயலில் அழிவடைந்த வீடுகளுக்கு ஐம்பது இலட்சம் ரூபா வழங்கப்படுவதை எங்களால் கூட நம்ப முடியாது இருந்தது.
ஒரேயொரு வீடுள்ளவர்களின் மனநிலைகளை எங்களால் புரிய முடிகிறது. இவ்வாறானவர்களின் கஷ்டங்களை வவுனியாவில் ஒரு வீடு, கொழும்பில் ஒரு வீடு மற்றும் இலண்டனில் ஒரு வீடு இருப்பவர்கள் அறியப்போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |