அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல்: Mosab Yousef அதிரடி
அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான விரிசல்கள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றன.
குறிப்பாக காஸா தொடர்பான ட்ரம்பின் 15 அம்ச சமாதான திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு பகிரங்கமாக நிராகரித்து விட்டதை தொடர்ந்து ட்ரம்பிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான உறவு மிகுந்த நெருக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது.
தாம் இல்லை எனறால் இஸ்ரேல் என்ற நாடு இருக்காது என்று ட்ரம்ப் கடந்த இரண்டு மாதங்களிற்கு முன்னர் குறிப்பிட்டு இருந்தார்.
அத்தோடு, அமெரிக்காவின் உதவிகள் இல்லாமல் இஸ்ரேலினால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் ட்ரம்ப் எச்சரித்து இருந்தார்.
இப்படிப்பட்ட பின்னணியில் தான் ஈரான் விடயத்திலும், உக்ரைன் சமாதான விடயத்திலும் ஒரு வெற்றியை அறிவிக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்ற ட்ரம்ப் காசா விடயத்திலாவது ஒரு சமாதான வெற்றியை அறிவிக்க எதிர்பார்த்திருந்தார்.
இந்தநிலையிலே, காஸா தொடர்பான 15 அம்ச சமாதான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளதை அடுத்து நெதன்யாகுவிற்கும் ட்ரம்பிற்கும் தனிப்போர் ஆரம்பித்து விட்டது.
இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் காணலாம்.
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
சூரிய கிரகணத்தில் துல்லியமாக சாகசம் செய்த ஒலிம்பிக் ஸ்கேட்போர்டு வீரர்! படு வைரலாகும் வீடியோ Manithan