வீதியில் வாகனம் செலுத்துவோருக்கு எச்சரிக்கை! பொலிஸ் அதிகாரிகளுக்கு பறந்தது உத்தரவு
18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நபர்களுக்கோ வாகனங்களை வழங்கும் பெற்றோர்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர இன்று (13.08.2026) இதனை தெரிவித்துள்ளார்.
விபரீதமான மனநிலையுடன் வாகனம் செலுத்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில், மோட்டார்சைக்கிள்களில் குழுக்களாக பயணிக்கும் சிலர் போதைப்பொருட்களைப் பயன்படுத்தி விபரீதமான மனநிலையுடன் வாகனங்களைச் செலுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய நபர்களுக்கு எந்தவித மன்னிப்பும் அளிக்காமல் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை
அத்துடன், 18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நபர்களுக்கோ வாகனங்களை வழங்கும் பெற்றோர்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சத்தம் மாற்றியமைக்கப்பட்ட, அசல் வடிவம் மாற்றப்பட்ட, பதிவு செய்யப்பட்ட மற்றும் கொள்ளளவை விட அதிக கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri