அடுத்த 24 - 48 மணி நேரத்தில் சூறாவளி உருவாக வாய்ப்பு.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் இயங்கும் பல நாள் கடற்றொழில் படகுகளுக்கு, பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சிவப்பு நிலை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வடக்கு அந்தமான் தீவுகளுக்கு அருகே வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளது.
இந்த தாழ்வு மண்டலம் பெரும்பாலும் அதே பிராந்தியத்தில் நீடித்து, 2026 ஒக்டோபர் 24ஆம் திகதிக்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
அதன்பிறகு, அது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஓக்டோபர் 25ஆம் திகதிக்குள் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, 2026 ஓக்டோபர் 26ஆம் திகதி காலைக்குள் மேற்கு - மத்திய வங்காள விரிகுடா பகுதியில் ஒரு சூறாவளிப் உருவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எனவே, மறு அறிவிப்பு வரும் வரை 10°வடக்கு-20°வடக்கு மற்றும் 80° கிழக்கு - 95° கிழக்கு ஆகிய அட்சரேகைகளுக்கு இடைப்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 23 நிலவரம் குறித்து கிடைத்த தரவுகளின்படி, அடுத்த 24-48 மணி நேரத்தில் சூறாவளி உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO