சிறீதரனை ஓரங்கட்ட சுமந்திரன் தந்திரோபாயம்..! வெளிச்சத்திற்கு வரும் கட்சியின் உண்மை நிலைப்பாடு

Sri Lankan Tamils M A Sumanthiran S. Sritharan Sri Lanka Politician Sri Lanka Government
By Nillanthan Feb 08, 2026 11:35 AM GMT
Report

கட்சிக்குள் சிறீதரனை மதிப்பிறக்கம் செய்வதில் சுமந்திரன் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

முக்கால் நூற்றாண்டு கால வயதைக் கொண்ட கட்சிக்குள் முதன்முதலாக தலைவருக்காக நடந்த ஒரு தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தலைமைப் பொறுப்பை ஏற்க விடாமல் தடுக்கப்பட்டு வருகிறார்.

இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியான தந்திரமான புத்திசாலித்தனமான நகர்வுகளின் ஊடாக ஓரங்கட்டப்பட்டு வருகிறார்.

அதே சமயம், சிறீதரனை கட்சிக்குள் சுற்றிவளைக்கும் வேலையை கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமந்திரன் அணி செய்து வருகிறது. 

தையிட்டி திஸ்ஸ விகாரையின் காணி உரிமம் தொடர்பில் விகாராதிபதி விடுத்துள்ள கோரிக்கை

தையிட்டி திஸ்ஸ விகாரையின் காணி உரிமம் தொடர்பில் விகாராதிபதி விடுத்துள்ள கோரிக்கை

சிறீதரன் எவ்வாறு கட்சிக்குள் ஓரங்கட்டப்படுகிறார்?

75 ஆண்டு கால வயதை கொண்ட கட்சிக்குள் முதன்முதலாக நடந்த தலைவர் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர் செயற்பட முடியாதபடி வழக்குப் போடப்பட்டது.

அடுத்ததாக, கட்சிக்குள் தீர்மானம் எடுக்கும் பொறுப்புகளில் அவருக்கு எதிரானவர்கள் அல்லது அவருடைய எதிர் அணியின் பக்கம் சாயக்கூடியவர்கள் படிப்படியாக நகர்த்தப்பட்டார்கள். இதன்மூலம் கட்சித் தீர்மானங்கள் சிறீதரனை ஓரங்கட்டும் விதத்தில் அமைவது உறுதி செய்யப்பட்டது.

சிறீதரனை ஓரங்கட்ட சுமந்திரன் தந்திரோபாயம்..! வெளிச்சத்திற்கு வரும் கட்சியின் உண்மை நிலைப்பாடு | Sumanthiran S Strategy To Marginalize Sridharan

அவ்வாறு பொறுப்பான பதவிகளை சிறீதரனின் எதிரணி கையில் எடுத்ததன்மூலம் கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பை படிப்படியாக சிறீதரனுக்கு எதிரானதாக வடிவமைக்கும் வேலைகள் தொடங்கின.

அடுத்ததாக சிறீதரனின் சொத்துக்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள். அவர் மதுச் சாலை அனுமதி பெற்றுக் கொடுத்ததாகக் குற்றச்சாட்டுக்கள். இது தொடர்பான முறைப்பாடுகளைச் செய்வதற்கு தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் பயன்படுத்தப்பட்டார்.

 சுமந்திரனின் சூழ்ச்சியில் சிக்கிய சிறீதரன்

அதேசமயம், கட்சித் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் தோற்ற காரணத்தால் ஊடக வெளிச்சத்தில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்த சுமந்திரன், கட்சிக்குள் பொறுப்பான பதவியைப் பெற்றதன் மூலம் மீண்டும் ஊடகங்களுக்கு முன் அடிக்கடி தோன்றும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

யார் தூதரகங்களை நெருங்கிச் செல்வது, குறிப்பாக யார் இந்தியாவின் இதயத்தில் இடம் பிடிப்பது என்பதிலும் போட்டி. அரசியலமைப்புப் பேரவையில் சிறீதரன் அரசாங்கத்திற்கு ஆதரவாக 8 தடவைகள் வாக்களித்துள்ளார் என்ற குற்றச்சாட்டை கட்சிக்கு உள்ளேயும் கட்சிக்கு வெளியே பகிரங்கமாகவும் திரும்பத்திரும்ப கூறுவதன் மூலம் கட்சிக்குள் மட்டுமல்ல சமூகத்துக்குள்ளும் அவரை மதிப்பிறக்கம் செய்ய முயற்சிக்கப்பட்டது.

சிறீதரனை ஓரங்கட்ட சுமந்திரன் தந்திரோபாயம்..! வெளிச்சத்திற்கு வரும் கட்சியின் உண்மை நிலைப்பாடு | Sumanthiran S Strategy To Marginalize Sridharan

அத்துடன், இவற்றையெல்லாம் விட முக்கியமாக அவருடைய தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்க முயற்சிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டின் இறுதி விளைவாகத் தான் தற்பொழுது கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியில் கை வைக்கப்பட்டிருக்கிறது.

தொடரும் குற்றச்சாட்டுக்கள்

சிறீதரன் கட்சிக்குள் மட்டும் சுற்றிவழிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்திலும் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினராகிய தயாசிறீ கட்சியின் உள் மோதல்களைப் பிரதிபலித்தார்.

யாழில் சிகிச்சைக்காக சென்ற பெண் உயிரிழப்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழில் சிகிச்சைக்காக சென்ற பெண் உயிரிழப்பு: பொலிஸார் தீவிர விசாரணை

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள நீண்ட பாரம்பரியத்தை கொண்ட மூத்த கட்சி ஒன்றுக்குள் ஏற்பட்ட உள் முரண்பாட்டை ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாகப் பேச வைத்தமை என்பது தமிழ்த் தேசிய வரலாற்றில் இதுதான் முதல் தடவை. இவை தவிர சிறீதரனின் அணிக்குள் இருப்பவர்கள் கழட்டி எடுக்கப்படுகிறார்கள்.

அவர்கள் ஊடகச் சந்திப்புகளை நடத்தி சிறீதரனை அவமானப்படுத்துகிறார்கள். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் உள்நாட்டு அலுவலர் என்னிடம் கேட்டார், “ஹை புரொபைலில்” இருப்பவர்கள்கூட சிறீதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. ஏன் இப்படி” என்று.

சிறீதரனை ஓரங்கட்ட சுமந்திரன் தந்திரோபாயம்..! வெளிச்சத்திற்கு வரும் கட்சியின் உண்மை நிலைப்பாடு | Sumanthiran S Strategy To Marginalize Sridharan

சிறீதரனுக்கு எதிரான பிரசார அணிக்குள் பிரபலமானவர்கள் லோயர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சமூகத்தில் நல்ல பொறுப்புகளை வகிப்பவர்கள், சமூகத்தில் மதிப்புக் கெட்டவர்கள், தாயகத்தில் இருப்பவர்கள், புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் என பெரியவொரு அணி இறக்கப்பட்டுள்ளது.

மெய்யான முகநூல் கணக்குகள், பொய்யான முகநூல் கணக்குகள் என்று சமூக வலைத்தளங்களில் இரண்டு அணிகளும் பணம் செலுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றன என்ற பொதுவான அவதானிப்பு உண்டு.

அத்துடன், கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வாறு சிறீதரனுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. 

இவ்வளவு தந்திரங்கள் எதற்காக..!

சிறீதரனுக்கு எதிராக மிக நுட்பமான, மிகப் புத்திசாலித்தனமான, மிகத் தந்திரமான,சதி சூழ்ச்சிகள் நிறைந்த ஒரு வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ஓர் உட்கட்சி முரண்பாட்டைக் கையாள்வதற்கு இவ்வளவு தந்திரமும் இவ்வளவு புத்திசாலித்தனமும் இதற்கு முன் பிரயோகிக்கப்பட்டதில்லை.

இதேயளவு தந்திரத்தை, புத்திசாலித்தனத்தை சிங்கள பௌத்த அரசு கட்டமைப்புக்கு எதிராகவும் ஏன் பயன்படுத்த முடியவில்லை? இதேயளவு தந்திரத்தை, ராஜதந்திரத்தை, புத்திசாலித்தனமான கணிதபூர்வமான நகர்வுகளை ஏன் வெளிநாடுகள், பேரரசுகளுடனான அணுகுமுறைகளில் கைக்கொள்ள முடியவில்லை? தமிழ்ச் சமூகத்தில் சாதாரணமாக குடும்பத்துக்குள்ளேயே கணவன், மனைவிக்கும்-தாய்க்கும் இடையே சுழித்தோட முயற்சிப்பான்.

சிறீதரனை ஓரங்கட்ட சுமந்திரன் தந்திரோபாயம்..! வெளிச்சத்திற்கு வரும் கட்சியின் உண்மை நிலைப்பாடு | Sumanthiran S Strategy To Marginalize Sridharan

சில சமயம் சகோதரர்களே ஒருவர் மற்றவரைச் சுழித்துக் கொண்டு ஓடுவதுண்டு. ஆனால், சமூகத்தின் மிகச்சிறிய அலகாகிய குடும்பத்துக்குள் இவ்வாறு மைக்ரோ தந்திரத்தை முன்னெடுக்கும் ஒரு சமூகமானது, தனது வெளியுறவுகளில் குறிப்பாக வெளிநாடுகளை அணுகும் விடயத்தில் ஏன் அவ்வாறு ராஜதந்திரமாக நடந்து கொள்வதில்லை? 

சூட்சுமமான வித்தைகள் வெளியுலகிற்கு இல்லையா?

தமிழ் மக்கள் அதிகமாகப் பார்க்கும் திரைத் தொடர்களில் பெரும்பாலானவை பெண் மைய திரை நாடகங்களே. இதில் வரும் நாயகிகள் செய்யும் தந்திரம் சில சமயம் அரசியல்வாதிகள் செய்யும் தந்திரத்தை விடவும் கணிதபூர்வமானதாக இருக்கும். நமது வீடுகளில் அதிகம் பார்க்கப்படுவது இந்த தந்திர நாடகங்கள் தான்.

அடுத்த 3 ஆண்டுகளில் கல்வி தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை - வெளிப்படுத்திய அமைச்சர்

அடுத்த 3 ஆண்டுகளில் கல்வி தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை - வெளிப்படுத்திய அமைச்சர்

ஏற்கனவே, நமது சிறுவர் கதைப் புத்தகங்களில் பஞ்ச தந்திரம் என்ற கதைத் தொகுதி உண்டு. பஞ்ச தந்திரத்தில் தொடங்கி தொலைத் தொடர் தந்திரங்கள் வரையிலும் தந்திரங்களை வாசிக்கின்ற, பார்க்கின்ற ஒரு சமூகம், வீட்டுக்குள் குடும்பத் தந்திரத்தை வெற்றிகரமாகப் பயிலும் ஒரு சமூகம்,சமூகத்தின் சிறிய நிறுவனங்களாகிய சனசமூக நிலையங்கள், ஆலய அறங்காவல் சபைகள், திருச்சபைகள், பழைய மாணவர் சங்கங்கள், பாடசாலைகள் அலுவலகங்களில் “ஸ்டாஃப் ரூம்கள்” போன்ற பெரும்பாலான நிறுவனங்களுக்குள் வெற்றிகரமாக அணிகளை உருவாக்கி தந்திரம் செய்யும் ஒரு சமூகம், ஏன் அரசியல் அரங்கில் மட்டும் வெளிநாடுகளோடும் வல்லரசுகளோடும் தந்திரமாக புத்திசாலித்தனமாக நடக்க முடியவில்லை?

சிறீதரனை ஓரங்கட்ட சுமந்திரன் தந்திரோபாயம்..! வெளிச்சத்திற்கு வரும் கட்சியின் உண்மை நிலைப்பாடு | Sumanthiran S Strategy To Marginalize Sridharan

தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய சிந்தனையாளரும் ஆன்மீகவாதியும் படைப்பாளியும் ஆகிய மு. தளையசிங்கம் கூறுவார் “சத்திய தந்திரம்” என்று. மகாபாரதத்தில் கிருஷ்ணரின் தந்திரங்கள் இல்லையென்றால் பாண்டவர்கள் வென்றிருக்கவே முடியாது.மகா பாரதத்தை அத்தகைய அர்த்தத்த்தில் சொன்னால் அது கிருஷ்ண தந்திரந்தான்.

எனவே சத்தியத்துக்காகப் போராடுகிறவர்கள் தந்திரம் பயில வேண்டும் என்ற பொருளில் தளையசிங்கம் அதை சத்திய தந்திரம் என்று அழைத்தார்.

ஆனால்,தமிழ்ச் சமூகத்தின் பஞ்ச மகாதந்திரங்கள் சொந்தச் சமூகத்துக்குள்ளேயே,சொந்தக் குடும்பத்துக்குள்ளையே,ஒரே பாடசாலைக்குள்ளேயே,ஒரே ஸ்டாஃப் ரூமுளுக்குள்ளேயே,ஒரே அறக்கட்டளைகளுக்குள்ளேயே,ஒரே திருச்சபைகளுக்குள்ளேயே,ஒரே கட்சிக்குள்ளேயே மட்டும் தானா? வெளி உலகத்தோடு இல்லையா?   

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Nillanthan அவரால் எழுதப்பட்டு, 08 February, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US