அடுத்த 3 ஆண்டுகளில் கல்வி தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை - வெளிப்படுத்திய அமைச்சர்
அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து தரங்களுக்குமான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கல்விச் சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கத்தின் இரத்தினபுரி மாவட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும்.
சீர்திருத்தங்கள்
இந்த ஆண்டில் 1 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அடுத்த ஆண்டில் 2 மற்றும் 7 ஆம் தரங்களுக்கான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும்.
மேலும், 2028ஆம் ஆண்டில் 3 மற்றும் 8 ஆம் தரங்களுக்கும், 2029ஆம் ஆண்டில் 4 மற்றும் 9 ஆம் தரங்களுக்கும் கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த சில ஆண்டுகளில் தரம் 9 வரையிலான முழுமையான பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளன.
பாடத்திட்டம் உருவாக்கம்
இந்தச் சீர்திருத்தங்களுக்குத் தேவையான பாடத்திட்டங்களை உருவாக்குவதில் கல்வி நிபுணர்கள் இணைந்துள்ளனர். முதலாம் தரத்திற்கான சீர்திருத்தங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், 6 ஆம் தரத்திற்கான பாடத்திட்ட மாற்றங்கள் மாத்திரம் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பிரஜைகளை உருவாக்குவதே இந்தச் சீர்திருத்தங்களின் பிரதான நோக்கமாகும் என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |