22ஆவது சட்டத்திருத்த விவகாரத்தில் அரசாங்கத்திற்கு தொடர் நெருக்கடி
மகா நாயக்க தேரர்கள், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நடைமுறைபடுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் முன்னதாவே கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் குறித்த தமது கருத்துக்கள் தொடர்பாக மகா தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இன்று(12) ஒரு செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதியிடம் கோரிக்கை..
அந்தக் கடிதத்தின் மூலம், மூன்று பீடங்களை சேர்ந்த மகா நாயக்க தேரர்கள், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைபடுத்த வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், ”இந்தக் கடிதத்தை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. எப்படியோ எனக்கு தற்போது கிடைத்துவிட்டது. இதில், நீதியரசர்கள், நாடு எந்தப் பாதையில் செல்கிறது என்பதை நேரடியாகப் புரிந்துகொண்டுள்ளனர்.
தற்போது, அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளின்படி, மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது முறையே 63 மற்றும் 65 ஆண்டுகள் ஆகும்.
அந்த வயது வரம்பை உயர்த்துவதற்கு அரசாங்கம் இந்த வழியில் செயல்படுவது பொருத்தமானது அல்ல என்று நாங்கள் நம்புகிறோம்” என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
யூடியூப் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி - இரட்டிப்பாக்கப்பட்ட தகுதி வரம்பு News Lankasri
natural home remedies : நரைமுடி பிரச்சினைக்கு இயற்கை தீர்வு! வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பராமரிப்புகள் Manithan