ஈரானில் கொதிநிலை! அயதுல்லா கமெனி மகனின் யாருமறியா ரகசிய சொத்துக்கள்
ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனியின் மகன் மொஜ்தபா கமெனி, அமெரிக்க தடைகளைக் கடந்து, எண்ணெய் வருவாயை அடிப்படையாகக் கொண்ட மறைமுக உலகளாவிய சொத்துத் தளத்துடன் தொடர்புடையவர் என Bloomberg தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விசாரணையின் படி, லண்டனின் பிரபலமான “Billionaire’s Row” (The Bishops Avenue) பகுதியில் உள்ள ஆடம்பர மாளிகைகள், ஐரோப்பாவின் உயர்தர ஹோட்டல்கள் மற்றும் மத்திய கிழக்கின் முக்கிய நகரங்களில் உள்ள பிரதான நிலங்கள் உள்ளிட்ட சொத்துகள், சுமார் £100 மில்லியனுக்கும் அதிக மதிப்புடையவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அயதுல்லா கமெனியின் மகன்
இந்த சொத்துகள் அனைத்தும் மொஜ்தபா கமெனியின் பெயரில் நேரடியாக இல்லை.
ஆனால், மேற்கத்திய உளவு அமைப்புகளின் மதிப்பீடுகள் மற்றும் விவரங்களை அறிந்த வட்டாரங்கள், கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்த முதலீட்டு பரிவர்த்தனைகளில் அவர் நேரடியாக ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கின்றன.

இந்த சொத்துகளுக்கான நிதி, பெரும்பாலும் ஈரானின் எண்ணெய் விற்பனையிலிருந்து வந்ததாகவும், அந்த பணம் பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, லிச்சென்ஸ்டைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வங்கிகள் வழியாக செலுத்தப்பட்டதாகவும் Bloomberg குறிப்பிட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு மட்டும் லண்டனில் ஒரு சொத்து €33.7 மில்லியன்க்கு வாங்கப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த சொத்துத் தளத்தின் பல பகுதிகள், ஈரானைச் சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் அலி அன்சாரியுடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது.
ரகசிய சொத்துக்கள்
அன்சாரி மீது கடந்த ஆண்டு பிரித்தானிய தடைகள் விதித்துள்ள நிலையில், அவர் ஈரானின் IRGC (Islamic Revolutionary Guard Corps) அமைப்புக்கு நிதி உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர் மீது EU அல்லது அமெரிக்க தடைகள் இல்லை. UAE, Isle of Man மற்றும் கரீபியன் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் வழியாக பணம் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டு, ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட், ஸ்பெயினின் மல்லோர்கா உள்ளிட்ட இடங்களில் ஹோட்டல்கள் மற்றும் நிலச் சொத்துகள் வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது வழக்கறிஞர் மூலம் வெளியிட்ட அறிக்கையில், மொஜ்தபா காமெனெயுடன் எந்தவிதமான நிதி அல்லது தனிப்பட்ட தொடர்பும் இல்லை என அலி அன்சாரி உறுதியாக மறுத்துள்ளார்.
மேலும், பிரி்ததானியா விதித்த தடைகளை அவர் சட்டரீதியாக எதிர்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். Bloomberg கணக்கெடுப்பின்படி, லண்டனில் மட்டும் ஒரு டஜனுக்கும் அதிகமான சொத்துகள் இந்த வலையமைப்புடன் தொடர்புடையவை. ஃபிராங்க்பர்ட்டில் உள்ள, பின்னர் Hilton பிராண்டாக மாற்றப்பட்ட ஒரு ஹோட்டல், உள்ளூர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாட்டில் பொருளாதார நெருக்கடி
மேலும், அன்சாரி மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் விரிவடைந்தால், ஐரோப்பிய சொத்துகள் கட்டாய விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
ஈரானுக்குள், அரசு ஊடகங்கள் உச்ச தலைவர் குடும்பத்தை எளிமையான, துறவுத்தன்மை கொண்ட வாழ்க்கை நடத்துவதாகவே காட்டி வருகின்றன.

வெளிநாடுகளில் உள்ள இந்த ரகசிய சொத்துகள், அந்த படிமத்துடன் முரண்படுவதாக Bloomberg சுட்டிக்காட்டுகிறது.
நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல் குறித்த மக்கள் கோபம் அதிகரித்துள்ள நிலையில், அதிகாரக் குடும்பங்களின் பிள்ளைகள் மீது செல்வம் குவித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை விவரிக்கும் “அகாசாதே (Aghazadeh)” என்ற சொல்லும் மீண்டும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam