அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் புதன்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சிறப்பு அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதே நேரத்தில், புதன்கிழமைகளில் கல்வி வகுப்புகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமை விடுமுறை
நீதித்துறை சேவைகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை விடுமுறை எனவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் நேற்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam