ஈரான் தனது அணு ஆயுதக் கனவைக் கைவிடாவிட்டால்...ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை
ஈரான் தனது அணு ஆயுதக் கனவைக் கைவிட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் மீதான வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஈரான் நிறைவேற்றத் தவறினால், அந்த நாட்டின் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் எச்சரிக்கை
"ஈரானை நோக்கி எங்களது மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த போர்க்கப்பல்கள் (Armada) சென்றுகொண்டிருக்கின்றன; அவற்றை பயன்படுத்த வேண்டிய சூழல் வராது என்று நம்புகிறேன்" என ட்ரம்ப் தனது எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் இந்த போர் பதற்றத்தைத் தணிக்க துருக்கி உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்ய முயன்று வரும் நிலையில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi), "எங்கள் விரல்கள் துப்பாக்கியின் விசையில் (fingers on the trigger) தயாராக உள்ளன; எந்தவொரு தாக்குதலுக்கும் உடனடியாகப் பதிலடி கொடுப்போம்" என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நிலைப்பாடு
இதற்கிடையில், ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடிய ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மரும் ஆதரித்துள்ளார்.
ஈரானின் அணு ஆயுதத் திட்டமும், போராட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறையும் உலக நாடுகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri