வான்பரப்பை அவசரமாக மூடிய ஐக்கிய அரபு இராஜ்ஜியம்! நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ட்ரோன்கள்
ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடியுள்ளது.
ஈரானினால் முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, விமானங்கள், பணியாளர்கள் மற்றும் நாட்டின் நிலப்பரப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அரபு நாடுகளிலும் கடுமையான தாக்குதல்
வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் 2 வாரங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பதிலடி கொடுத்து வரும் ஈரான், அமெரிக்காவின் படைத்தளங்கள் உள்ள அரபு நாடுகளிலும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

ஈரானில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் டிரோன் தாக்குதலை அமீரக விமான பாதுகாப்பு படையினர் இடைமறித்து அழித்து வருகின்றனர்.
நாட்டில் 17-வது நாளான நேற்று தொடர்ந்து ஈரானின் தரப்பில் ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அமீரகத்தின் வானில் பறந்து வந்தன. இதில் நேற்று அதிகாலை துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே டிரோன் தாக்குதல் முயற்சி நடந்தது.
பயங்கர தீ விபத்து
இதனை அமீரக வான் பாதுகாப்பு படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தில் எண்ணெய் கிடங்கு மேல் சிதறிய டிரோன் பாகங்களால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள 4 முக்கிய சாலைகள் தற்காலிமாக மூடப்பட்டன. காலை நேரத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து, உடனடியாக விமான சேவைகளும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபி உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களும் தற்போது மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
துபாய் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விமான போக்குவரத்துக்கான வான்பகுதியை மூடுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் விமான நிறுவனங்களின் அறிவுறுத்தலை பின்பற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் நிகழும் ராகு-கேது நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் இறுதியில் ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு தான்! Manithan