விபத்தில் காயமடைந்த நட்சத்திர வீராங்கனை லிண்ட்சே வொன்! அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி
மிலன் கார்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை லிண்ட்சே வொன் (Lindsey Vonn), சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ணப் பனிச்சறுக்கு போட்டியின் போது விபத்தில் சிக்கி காயமடைந்தமை அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
41 வயதான லிண்ட்சே வொன், கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) பகுதியில் நடந்த 'டவுன்ஹில்' பந்தயத்தில் பங்கேற்றார்.
அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை
அதன்போது பனிப்பொழிவு மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஒரு எகிறி குதித்தலின் (Jump) போது நிலைதடுமாறி பாதுகாப்பு வலைக்குள் சிக்கினார்.

நீண்டநேர முதலுதவிக்குப் பிறகு, தனது இடது முழங்காலில் ஏற்பட்ட வலியுடன் தடுமாறி அங்கிருந்து வெளியேறிய அவர், பின்னர் ஹெலிகொப்டர் மூலம் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னதாக வலது முழங்காலில் டைட்டானியம் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு, சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய லிண்ட்சே வொனுக்கு இந்த விபத்து ஒரு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்த தொடரில் நடந்த எட்டு பந்தயங்களில் ஏழில் பதக்கம் வென்று அபாரமான திறமையுடன் இருந்த அவர், பெப்ரவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஒலிம்பிக் டவுன்ஹில் பந்தயத்தில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri