ட்ரம்பையே மிரள வைக்கும் கமேனியின் இரகசிய திட்டம்.. அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பதற்றநிலை
ஈரானை எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா தாக்கலாம் என்ற எதிர்ப்பார்ப்பை தூண்டும் வகையில், ட்ரம்ப் தனது பாரிய விமானம் தாங்கி போர் கப்பல்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்கா, ஈரானை தாக்கினால், கடும் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானிய படைகள் தயார் நிலையில் இருப்பதாக அந்நாடு எச்சரித்துள்ளது.
அதேநேரம், மத்திய கிழக்கில் உள்ள ஈரானின் ஆதரவு அமைப்புகளான ஹிஸ்புல்லா, ஹவுத்தியும் ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் என அறிவித்துள்ளன.
இவ்வாறிருக்கையில், இருநாடுகளுக்கும் அதிகரித்து வரும் போர் பதற்றம், சர்வதேச ரீதியில் ஒரு அச்சத்தை எழுப்பியுள்ளதாக பல ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
உடன் பதிலடி
இந்நிலையில், அமெரிக்கா தாக்கினால், அதனை எதிர்கொள்ள ஈரான் வைத்துள்ள இரகசிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், ஈரான் ஆயிரமாயிரம் அதிநவீன ட்ரோன்களை தங்களது இராணுவத்தில் இணைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ட்ரோன்கள் தான் கடந்த ஆண்டு நடைபெற்ற இஸ்ரேலுடனான மோதலில் அதன் வான் பாதுகாப்பு அமைப்புகளை உடைத்து அதிர்ச்சி அளித்தது.
அதேவேளையில், போர் ஆரம்பித்தால் தங்கள் நாடு பெருமளவு இழப்பை சந்திக்கும் என அஞ்சும் மத்திய கிழக்கில் உள்ள அண்டை நாடுகள் அமைதி பேச்சுவார்த்தையை வலியுறுத்துகின்றன.
இதற்கிடையில், ட்ரம்பின் சொல்லாட்சியும், சமீபத்திய நாட்களில் ஈரானின் கடற்கரையில் அமெரிக்க இராணுவ தளவாடங்களை அசாதாரணமாக நிலைநிறுத்தியிருப்பதும், தாக்குதல்கள் உடனடியாக நிகழக்கூடும் என்பதைக் குறிக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆயுதக் குவிப்பு..
ஈரானில் புதிய இராணுவக் குவிப்பு, ஈரான் மீதான உடனடி தாக்குதலைக் குறிக்கலாம், ஆனால் ஒரு வரையறுக்கப்பட்ட தாக்குதலை மேற்கொள்ளவே திட்டமிடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஈரான், கடந்த செவ்வாயன்று தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க எந்தவொரு சாத்தியமான போருக்கும் முழுமையாகத் தயாராக இருப்பதாகக் கூறியது, அதேநேரம், பிரச்சினைகளைத் தீர்க்க உரையாடலுக்கு முன்னுரிமை அளிப்பதாக வலியுறுத்தியது.
இதற்கிடையில், ஈரானில், அதிசக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளான, ஈரான் ஃபட்டா-1 மற்றும் ஃபட்டா-2 போன்ற ஏவுகணைகளை வெளியிட்டு நிலைநிறுத்தியுள்ளதாக இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவை ஹைப்பர்சோனிக் (5 மேக் வேகத்திற்கு மேல் பயணிக்கும்) மற்றும் மறைந்து தாக்கும் திறன் கொண்டவை என்று கூறப்படுகின்றது, இதனால் அவற்றை இடைமறிப்பது மிகவும் கடினம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், துல்லிய-வழிகாட்டும் ஏவுகணையான கெய்பர் ஷெகான், 1,450 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் ஒரு திட எரிபொருள் ஏவுகணையாகும், இது அதன் உயர் துல்லியம் மற்றும் சூழ்ச்சி திறனுக்காக பெயர் பெற்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri