சட்டவிரோதமாக தேக்கம் மர குற்றிகளை எடுத்து வந்த சந்தேகநபர் சாவகச்சேரியில் கைது
கருங்கல்லு சல்லிக்குள் தேக்கம் குற்றிகளை மறைத்து ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்றுடன் சாரதியொருவர் இன்றையதினம்(7) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி குறித்த மரக் குற்றிகளை கொண்டு வந்தபோது சாவகச்சேரி பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சாவகச்சேரியில் கைது
15 இலட்சம் ரூபா பெறுமதியான தேக்கம் குற்றிகளை டிப்பரின் கீழே மறைத்து வைத்துவிட்டு சல்லியை ஏற்றி வந்தபோது, சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகரான மயூரன் மற்றும் கொஸ்தாபல் நிருபன் ஆகியோர் அந்த டிப்பரை சோதனையிட்டனர்.
இதன்போது அதில் மரக்குற்றிகள் ஏற்றி வந்தமை தெரிய வந்துள்ளது.
கைது நடவடிக்கை செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 19 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்து வெளிவந்த மாரீசன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

நீட் தேர்வில் 99.9 சதவீதத்துடன் முதலிடம் பிடித்த மாணவி யார்? இவரின் வெற்றிக்கான ரகசியம் News Lankasri
