அடுத்த சில மணிநேரங்களில் - மிகப்பெரிய தாக்குதல்! குறிவைக்கப்பட்டுள்ள 5 முக்கிய எரிசக்தி நிலையங்கள் - IRGC அதிரடி உத்தரவு
வளைகுடா பிராந்தியத்தில் உள்ள ஐந்து முக்கிய எரிசக்தி நிலையங்களை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை உத்தரவு பிறப்பித்துள்ளது.
IRGC-உடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம், டெலிகிராமில் பின்வரும் இடங்களுக்கு அருகில் உள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு "அவசர எச்சரிக்கை" ஒன்றை வெளியிட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்கள்
சவூதி அரேபியாவில் உள்ள சம்ரெஃப் சுத்திகரிப்பு நிலையம்Samref Refinery – Saudi Arabia
சவூதி அரேபியாவில் உள்ள அல்-ஜுபைல் பெட்ரோ கெமிக்கல் வளாகம் Al-Jubail Petrochemical Complex – Saudi Arabia

மசாயித் ஹோல்டிங் நிறுவனம்Mesaieed Holding Company – Saudi Arabia
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல்-ஹொஸ்ன் எரிவாயு வயல்Al-Hosn Gas Field – United Arab Emirates
கத்தாரில் உள்ள ராஸ் லஃபான் Ras Laffan Refinery – Qatar
சட்டபூர்வமான தாக்குதல் இலக்கு
“இந்த மையங்கள் தற்போது நேரடி மற்றும் சட்டபூர்வமான தாக்குதல் இலக்குகளாக மாறியுள்ளன. அடுத்த சில மணிநேரங்களில் இவை குறிவைத்து தாக்கப்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அந்த பகுதிகளில் உள்ள அனைத்து குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் எந்த தாமதமும் இல்லாமல் உடனடியாக அந்த இடங்களை விட்டு பாதுகாப்பான தூரத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam