மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை! அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் மாகாண கல்வி பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
பாடசாலைகளுக்கான விடுமுறை
அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மத்திய மலைநாட்டில் பெய்யும் கனமழையின் காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
நீர்மட்டம் நிரம்பி வழியும் அளவை நெருங்கி வருவதாகவும் குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.