கனமழையினால் நீரில் நனைந்து சேதமாகிய நீதிமன்ற வழக்கு கோப்புகள்
கொழும்பு நகரில் பெய்த கனமழை காரணமாக, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் பெருமளவிலான வழக்குக் கோப்புகள் நீரில் நனைந்துள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பழைமையான கொழும்பு மாவட்ட நீதிமன்றக் கட்டிடத்தின் ஒரு பகுதி அண்மையில் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்குக் கோப்புகள் கொள்கலன்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே அவை கனமழையில் சிக்கி நனைந்துள்ளன.

இவ்வாறு நீரினால் நனைந்த வழக்குக் கோப்புகளை வெயிலில் போட்டு உலர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட நீதிமன்ற வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
நேற்று முன்தினம் பெய்த கன மழையின் போது இந்த வழக்கு கோப்புகள் இவ்வாறு நனைந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.