2027 IPL ஏலம் மீண்டும் இந்தியாவில்
2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது.
வீரர்கள் மாற்றம் இருக்காது
2023ஆம் ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலம் கொச்சியில் நடைபெற்றது. அதன்பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகள் வெளிநாடுகளில் ஏலம் நடத்தப்பட்டது.

2024ஆம் ஆண்டு டுபாயிலும், 2025ஆம் ஆண்டு மெகா ஏலம் ஜெட்டாவிலும், 2026ஆம் ஆண்டு ஏலம் அபுதாபியிலும் நடைபெற்றது. தற்போது 2027ஆம் ஆண்டு ஏலத்தை மீண்டும் இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் 2027 ஏலம் மினி ஏலமாக நடைபெற உள்ளது. இதனால் மெகா ஏலத்தைப் போன்று அணிகளில் மிகப்பெரிய அளவில் வீரர்கள் மாற்றம் இருக்காது என .தெரிவிக்கப்பட்டுளளது.