நக்கிள்ஸ் மலைத்தொடரில் இளைஞரின் சடலம் மீட்பு - விசாரணைகள் தீவிரம்
இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நக்கிள்ஸ் மலைத்தொடரின் குறுகலான குன்றுப் பிரதேசமொன்றுக்குள் இருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மெனிக்ஹின்ன, லூனுகெட்டியமடித்த, கந்தேகம்மெத்த பகுதியைச் சேர்ந்த, ரன்ஹோட்டி கெதர செனித் கவீஷ அருண குமார என்ற இளைஞர், கடந்த வெள்ளிக்கிழமை(11.09.2026) முதல் தனது வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார்.
காணாமல் போன இளைஞர்
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் பொலிஸாரிடம் புகார் அளித்து, தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருந்தனர்.

பொலிஸார் நடத்திய அலைபேசி கோபுரத் தரவு விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, நக்கிள்ஸ் மலைத் தொடரின் குறுகலான குன்றுகளின் நடுவில் சிக்கிய நிலையில் அந்த இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியை அணுகுவது கடினமாக இருந்ததால், அதை கீழே இறக்குவதற்கு உடுதும்பறை பொலிஸார் இராணுவ கமாண்டோ படையின் உதவியையும் நாடியுள்ளனர்.
இது விபத்தா அல்லது தற்கொலையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
மேலும் சம்பந்தப்பட்ட பொலிஸார் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.