நீதிமன்றத்தில் இருந்து வெளியேறும் போது நாமல் வெளியிட்ட விடயம்
அதிகாரிகளுக்கு பிரச்சினை வரும் என்பதால், உங்களுடைய கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலை பேருந்தில் திரும்பிச் செல்லும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நீதிமன்ற உத்தரவு
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொள்முதல் வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் சிறைச்சாலை பேருந்தில் நாமல் ராஜபக்ச அழைத்துச் செல்லப்படும்போது ஊடகவியலாளர்கள் நாமல் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்த நாமல் ராஜபக்ச, “உங்களுடைய கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியும், ஆனால், அதிகாரிகளுக்கு(சிறைக்கு அழைத்து வந்த அதிகாரிகள்) பிரச்சினை வரும் என்பதால் பதிலளிக்க முடியவில்லை” என தெரிவித்துச் சென்றுள்ளார்.
இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! கடைசி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கடிதம் - ஏற்பட்டுள்ள சிக்கல்






