நிலச்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள்! பெரும் ஆபத்தில் 30,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்
‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சில இடங்களில் நிலச்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
இதன் சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர இன்று (16) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ,இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நிலவிய மழையுடனான வானிலை காரணமாகவே சில இடங்களில் இவ்வாறான ஆபத்து அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்
எதிர்வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படுவதுடன், நிலச்சரிவு அபாயம் காரணமாக தற்போது 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அதிக அபாயகரமான நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் என்றும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'டித்வா' சம்பவத்துடன் மேலும் 16,793 குடும்பங்கள் அதிக அபாய நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அதிக அபாய நிலையில் உள்ளன.
எனவே வெளியிடப்படும் அனைத்து அறிவிப்புகளையும் கவனத்தில் கொள்ளுமாறும், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலிப் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! கடைசி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கடிதம் - ஏற்பட்டுள்ள சிக்கல்