அடுத்த சில மாதங்களில் கடுமையான வெப்பநிலை! தீவிரமடையும் எல்நினோ தொடர்பில் வெளியான கடும் எச்சரிக்கை

Climate Change Weather El Niño
By Farook Sihan Sep 16, 2026 07:03 AM GMT
Report

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெப்ப மாற்றம் காரணமாக எல்நினோ காலநிலை முறை தீவிரமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் உலகெங்கிலும் கடுமையான வெப்பம், வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற வானிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது.

இந்த நிகழ்வானது 2026 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் உச்சத்தை அடைந்து ‘மிகவும் வலுவானதாக’ மாறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், 2027 பெப்ரவரி வரை தொடர்வதற்கான வாய்ப்பு 100 சதவீதத்தை எட்டியுள்ளதாக கணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வானிலை மாற்றங்கள்

வெப்பமண்டல பசிபிக் பகுதியின் மேற்பரப்புக்குக் கீழே அசாதாரணமாக வெப்பமான நீரின் பாரிய இருப்பு காணப்படுகின்றது.

ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் மேற்பரப்புக்குக் கீழே உள்ள நீரின் வெப்பநிலை இயல்பை விட 8°C (14°F) வரை அதிகமாகப் பதிவாகியுள்ளது.

அடுத்த சில மாதங்களில் கடுமையான வெப்பநிலை! தீவிரமடையும் எல்நினோ தொடர்பில் வெளியான கடும் எச்சரிக்கை | Warning Regarding Intensifying El Ni O Climate

“பூமி தற்போது அறிமுகமில்லாத காலநிலை மாற்றத்திற்குள் நுழைந்துள்ளது, கடல் நீரும் தொடர்ந்து வெப்பமடைந்து வருகிறது” என ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகும் இந்த இயற்கையான காலநிலை மாற்றம், இம்முறை பெருங்கடல்கள் ஏற்கனவே அதிக வெப்பத்துடன் காணப்படுவதனால் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

மே முதல் ஒகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் பசிபிக் கடலின் வெப்பநிலை இயல்பை விட 2.6°C வரை உயர்ந்துள்ளது.

வெள்ளப் பெருக்குகள் 

இதன் காரணமாக உலகளவில் விவசாயம், பொது சுகாதாரம், நீர் விநியோகம் மற்றும் எரிசக்தித் துறைகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

வறட்சி மற்றும் திடீர் வெள்ளப் பெருக்குகள் மூலம் சமூகங்கள் மற்றும் பொருளாதாரத்திற்குப் பெரியளவிலான பாதிப்புகள் ஏற்படக் கூடுமென WMO தலைவர் செலஸ்டே சவுலோ தெரிவித்துள்ளார்.

அடுத்த சில மாதங்களில் கடுமையான வெப்பநிலை! தீவிரமடையும் எல்நினோ தொடர்பில் வெளியான கடும் எச்சரிக்கை | Warning Regarding Intensifying El Ni O Climate

இவ்வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் தேசிய வானிலை முகமைகள் மற்றும் அரசுகள் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இதேவேளை, நிலவும் காலநிலை மாற்றம் மற்றும் தீவிரமடைந்து வரும் வெப்பநிலை தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

அரவிந்த டி சில்வாவை கைது செய்ய பிடிவிராந்து உத்தரவு

அரவிந்த டி சில்வாவை கைது செய்ய பிடிவிராந்து உத்தரவு

தமிழரசுக் கட்சிக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

தமிழரசுக் கட்சிக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US