கடந்த அரசாங்கத்துடன் நெருங்கிய செயற்பட்ட குற்றவாளிகள் தப்பியோட்டம்
முன்னாள் நீதியமைச்சரின் மகன் ரகித ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களின் அனுசரணையுடன் இயங்கிய பாதாள உலகக குழுக்களின் உறுப்பினர்கள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.
குறித்த பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் பல வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.
முழு நாடும் ஒன்றாக என்ற தேசிய பொறிமுறையை செயல்படுத்தியதன் பின்னர் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் தப்பியோட்டம்
அதற்கமைய, பொலிஸ் மற்றும் முப்படையினர் நேற்று நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் இத்தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள 112 குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்குச் சொந்தமான 4,695 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக, ஏனைய நிதி சார்ந்த குற்றங்கள் மூலம் ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்களும் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக இதன்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.