இறுதி சடங்குக்கு சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்..! பொலிஸார் தீவிர விசாரணை
இறுதிச் சடங்கு நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த நபரொருவர், கெசெல்கமு ஓயாவுக்குச் செல்லும் நீரோடை கால்வாயில் சடலமாக கிடந்த நிலையில், பொகவந்தலாவ பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று(31.10.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், பொகவந்தலாவை செப்பல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான நாகராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மர்மமான முறையில் உயிரிழந்த நபர்
குறித்த நபர் நேற்று(30) இரவு, பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோரா தோட்டத்தில் இடம்பெற்ற உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட பின்னர், நடந்தே வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, அவர் மர்மமான முறையில் கால்வாயில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பும் வழியில் அவர் கால்வாயில் தவறி விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



செயற்றிட்டம் போர்வையில் பல மில்லியன் ரூபாய் மோசடி..! ஆளுநருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு