கோட்டாபய ராஜபக்சவின் 'மிக்' விமான கமிஷன் பணத்திற்கு நடந்தது என்ன! அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்...
'மிக்' விமானக் கொடுக்கல் வாங்கலில் நடந்த ஊழல் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்றும் வரும் நிலையில் கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பல மணிநேர வொக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.
இந்தக் கொடுக்கல் வாங்கலின் பின்னணியில் மறைந்துள்ள கமிஷன் பணம் யாருடைய கணக்குகளில் வைப்பிலிடப்பட்டது? எங்கே சென்றது? 'டி.எஸ். அலையன்ஸ்' (DS Alliance) நிறுவனம் ஒரு போலி நிறுவனமாக உருவாக்கப்பட்டு அதன் கீழ் இயங்கிய 'பெலிமிசா' (Bellimissa) நிறுவனத்திற்கு இலங்கையின் விமானப்படை 15.66 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அனுப்பியுள்ளது.
கொடுக்கல் வாங்கல் எப்படி நடந்தது
அதில் குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கலுக்காக உண்மையாகவே செலவிடப்பட்டுள்ளது 7.83 மில்லியன் டொலர்கள் மட்டுமே. அப்படியானால் எஞ்சிய பணம் எங்கே சென்றது? யாருடைய கணக்கில் வைப்பிலிடப்பட்டது? மேலும் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட விதம் விசாரணைகள் நிறுத்தப்பட்ட விதம் என அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.
இந்தக் கொள்முதல் கொடுக்கல் வாங்கலானது குளிர் அறைகளில் இருந்த சில நபர்களின் பாக்கெட்டுகளை நிரப்பி அவர்களின் சுகபோகத்திற்காகவே தீர்மானிக்கப்பட்ட ஒரு கொடுக்கல் வாங்கலா?
இந்தக் கொடுக்கல் வாங்கலானது உண்மையிலேயே இலங்கை விமானப்படையின் தாக்குதல் படைப்பிரிவை வலுப்படுத்தும் நோக்கத்திலா செய்யப்பட்டது? அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பைகளை நிரப்பும் நோக்கத்திலா செய்யப்பட்டது? எனும் கேள்வி எழுகிறது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச இந்த மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் விசாரணையை நிறுத்தினார். அவ்வாறு நிறுத்துவதற்கு முன்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய புலனாய்வாளர்களுக்கு இந்தக் கொடுக்கல் வாங்கல் பற்றிய சில முக்கிய தடயங்களைக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
இந்த 'டி.எஸ். அலையன்ஸ்' எனும் நிறுவனத்தின் உரிமையாளரான லீ குடும்பத்தினரால் சிங்கப்பூரில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு வங்கிப் கணக்கிலிருந்து குறைந்தபட்சம் 4,39,000 டொலர்கள் பணம் இலங்கையின் கொமர்ஷல் வங்கியின் கம்பஹா கிளையில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
கம்பஹா கிளையில் லெலும் துமிந்த மான்னப்பெரும எனும் கழிவுநீர் பொறியியலாளர் ஒருவரின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. கழிவுநீர் பொறியியலாளர் ஒருவரின் கணக்கில் இவ்வளவு பாரிய தொகையா யார் இந்த லெலும் துமிந்த?.
சிங்கப்பூர் 'டி.எஸ். அலையன்ஸ்' நிறுவனம் தங்களது கணக்கொன்றின் மூலமாகவே இலங்கையின் கம்பஹா கொமர்ஷல் வங்கி கிளைக்கு இந்தப் பணத்தை அனுப்புகிறது.
டுபாயில் வாங்கப்பட்ட சொத்து
இந்த லெலும் துமிந்த மான்னப்பெரும என்பவர் உதயங்க வீரதுங்கவின் சகோதரியை திருமணம் செய்துள்ளார். உறவுமுறையின் படிஇ இந்தப் பணம் வைப்பிலிடப்பட்ட நபர் உதயங்க வீரதுங்கவின் மைத்துனர் ஆவார்.
இந்த மான்னப்பெரும என்பவரின் வங்கிப் கணக்கில் வீழ்ந்த பணத்திற்கும் மிக் கொடுக்கல் வாங்கலுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய புலனாய்வாளர்களால் முடியாமல் போகிறது.
ஆனால் மிக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய 'டி.எஸ். அலையன்ஸ்' நிறுவனத்தின் கணக்கிலிருந்தே பணம் வந்துள்ளது என்பது உறுதியாகிறது. இந்த மான்னப்பெரும என்பவர் இந்தப் பணத்திலிருந்து 324,971.6 டொலர்களை ஐக்கிய அரபு இராஜியத்தின் டுபாய் நகரில் சொத்து விற்பனை செய்யும் 'டார்கெட் எஸ்டாப்ளிஷ்மென்ட்' (Target Establishment) எனும் நிறுவனத்திற்குச் செலுத்தியுள்ளார்.
ஐக்கிய அரபு இராஜியத்தின அஜ்மான் நகரில் உள்ள 'கோல்ட் கிரஸ்ட் வியூஸ் 2' (Goldcrest Views 2) எனும் சொகுசு வீட்டுத் தொகுதியின் 'பென்ட் ஹவுஸ்' (Penthouse) அடுக்குமாடி குடியிருப்பு இலக்கம் 3403 ஐக் கொள்முதல் செய்வதற்காகவே இந்தப் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது.
2018 ஆம் ஆண்டு இந்த வீட்டிலிருந்து டுபாய் பொலிஸாரால் உக்ரைனுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்படுகிறார்.இந்த பிரம்மாண்டமான கமிஷன் தொகையில் மிகச்சிறிய ஒரு பகுதிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களாகவே இவை கிடைத்துள்ளதாக நம்புகின்றனர்.
இந்த கமிஷன் தொகையில் கணிசமான ஒரு பகுதி லத்வியாவில் (Latvia) உள்ள வங்கிக் கணக்கொன்றில் வைப்பு செய்யப்பட்டுள்ளது என்ற விடயமும், அதற்கு மேலதிகமாக நியூசிலாந்து, பனாமா, உக்ரைன், ஹொங்கொங், சிங்கப்பூர் மற்றும் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (British Virgin Islands) ஆகிய நாடுகளிலுள்ள பல வங்கிக் கணக்குகளிலும் வைப்பு செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! கடைசி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கடிதம் - ஏற்பட்டுள்ள சிக்கல்