தமிழீழத்தை எதிர்க்கும் அர்ச்சுனா எமது மேடைகளில் இருக்க வேண்டியவர்..! மகிந்தவின் சகா வெளியிட்ட தகவல்
தமிழீழத்தை எதிர்க்கும் இராமநாதன் அர்ச்சுனா போன்றவர்கள் தமது மேடைகளில் கட்டாயம் இருக்க வேண்டிய நபர் என முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
தாம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்த ஒருவர் எனவும் தற்பொழுது தமிழ் ஈழம் அமைக்கப்படுவதை விரும்பவில்லை எனவும் அனுராதபுரம் மேடையில் அர்ச்சுனா கூறியதாக கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுராதபுரம் மேடையில் அர்ச்சுனா
எதிர்காலத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என அர்ச்சுனா கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழீழத்தை ஆதரித்த, பிரிவினைவாதத்தை விரும்பிய வடக்கை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், எமது மேடையில் ஏறி தொடர்ந்தும் தமிழீழத்திற்காக குரல் கொடுக்கப் போவதில்லை என கூறுகின்றார் என்றால் அவரை நாம் மேடையில் வைத்துக் கொள்ளத்தான் வேண்டும் என கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என அர்ச்சுனா கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நபர்களை எமது மேடையில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர்களை பாராட்ட வேண்டும் எனவும் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.