முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி FCIDயில் முன்னிலை
புதிய இணைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டியாராச்சி, பொலிஸ் நிதிமோசடிப் புலனாய்வுப் பிரிவின் (FCID) விசாரணைகளை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.
இன்று (16) காலை அவர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலுவையில் உள்ள விசாரணை தொடர்பான வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளியிட்ட தகவல்
இதன்போது அங்கு வருகை தந்த அவர், பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் முன் முன்னிலையாகுமாறு தனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

"உள்ளே அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த பின்னரே செய்தியாளர்களிடம் பதிலளிக்க முடியும் என்றும், நான் எந்தவிதமான மோசடியிலோ அல்லது ஊழலிலோ ஈடுபடவில்லை," என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! கடைசி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கடிதம் - ஏற்பட்டுள்ள சிக்கல்