வளைகுடா கடல் போக்குவரத்தில் நெருக்கடி: ஐ.நா கடல்சார் அமைப்பு அவசரக் கூட்டம்!
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO), ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாகப் பாரசீக வளைகுடாப் பகுதியில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்துப் பாதிப்புகள் குறித்து விவாதிக்க "அவசரகாலக் கூட்டத்திற்கு" அழைப்பு விடுத்துள்ளது.
ஏ.எஃப்.பி (AFP) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சர்வதேச கடல் பாதுகாப்பினை ஒழுங்குபடுத்தும் இந்த அமைப்பு, இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு குறித்துப் பல்வேறு தீர்மானங்களை முன்வைக்க உள்ளது.
குறிப்பாக, ஈரான் தனது அண்டை நாடுகள் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக விடுத்துள்ள அச்சுறுத்தல்களைக் கடுமையாகக் கண்டித்து ஒரு பிரகடனத்தை வெளியிட வேண்டும் என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
கோரிக்கை
மறுபுறம், ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள், வளைகுடாப் பகுதியில் சிக்கியுள்ள கப்பல்கள் மற்றும் மாலுமிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த விவகாரத்தில் தனது கருத்தைச் சமர்ப்பித்துள்ள ஈரான், கடல்சார் பாதுகாப்பு சீர்குலைவதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சட்டவிரோத நடவடிக்கைகளே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது.
கப்பல் போக்குவரத்து
இந்தப் போரின் நேரடி விளைவாகவே கப்பல் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் உள்ள உண்மைக் காரணங்களை மறைக்க முடியாது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

சர்வதேச வர்த்தகத்தின் முக்கியப் பாதையாகத் திகழும் வளைகுடாப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த முட்டுக்கட்டை, உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan