அவதானமாக செயற்படவும்..! நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
பிரபலமான நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி இணையவழி நிதி மோசடிகளை மோசடியாளர்கள் செய்து வருவதாக இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இணையம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடி நடவடிக்கைகள் மற்றும் நிதி முறைகேடுகள் குறித்து இலங்கை பொலிஸார் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தபோதிலும், மோசடிகள் குறித்து பெறப்படும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சமூக ஊடக விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை
மோசடியாளர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களை மொபைல் செயலிகளை நிறுவுமாறும், தொலைபேசித் திரைகளைப் பகிருமாறும் கேட்டு மோசடிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூக ஊடகங்களில் "பல்வேறு வருமான வழிகள்" அல்லது "அதிக லாபம் தரும் முதலீடுகள்" போன்ற விளம்பரங்கள் குறித்து கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோசடிகளில் சிக்க வேண்டாம்
வங்கிக்கணக்கு எண்கள், கடவுச்சொற்கள் அல்லது OTP குறியீடுகளை எந்தக் காரணத்திற்காகவும் வெளியாட்களுடன் பகிரக்கூடாது எனவும், மேலும், எந்தவொரு வங்கியோ அல்லது நிறுவனமோ வாடிக்கையாளர்களிடம் தொலைபேசி மூலம் இதுபோன்ற தகவல்களைக் கேட்காது என்பதை அறிந்திருக்க வேண்டும் என்றும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே இவ்வாறான மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கணக்குகளைப் பாதுகாக்க, உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam