QR குறியீட்டில் சிக்கல்கள்! கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீண்ட வரிசைகள் - இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு
எரிபொருள் விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட கியூஆர் குறியீட்டில் இருந்த பல சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுவிட்டதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமகே தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று (17) கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலட்சக்கணக்கானோருக்கு கியூஆர் குறியீடுகள்
இதுவரை, நாட்டில் சுமார் 10,000 பேரை தவிர மற்ற அனைவரும் தத்தமது QR குறியீடுகளை பெற்றுவிட்டனர். அதன்படி, இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களது கியூஆர் குறியீடுகளைப் பெற்றுள்ளனர்.

மேலும், மிகச் சிறிய எண்ணிக்கையிலான மக்களுக்குப் பதிவின்போது சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், பல சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிட்டதால், உரிய கியூஆர் குறியீட்டை மீண்டும் பெற முயற்சிப்பதன் மூலம் கியூஆர் குறியீட்டை எளிதாகப் பெறலாம். இன்று சரிபார்க்குமாறு கூறுகிறோம்.
சராசரியாக, ஒரு மணி நேரத்திற்கு 30,000 புதிய பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மணி நேரமும் 30,000 பேர் பதிவு செய்கிறார்கள்.இப்போது இந்த பிரச்சினைகளை ஓரளவிற்குத் தீர்த்துவிட்டோம். புதிய QR குறியீடு வரவில்லை. எனில் சுமார் 2 மில்லியன் தரவுகள் நீக்கப்பட்டுள்ளது.
எனவே சிலர் மீண்டும் பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும். QR ஒதுக்கீடு இந்த வார இறுதியில் முடிவடையும், எனவே QR குறியீட்டைப் பதிவு செய்து, தங்களுக்கு உரிமையான எண்ணெய் அளவைப் பெற்றுக்கொள்ளுங்கள். சில தரப்பினருக்குச் சொந்தமான வாகனங்களுக்கான உரிய ஆவணங்கள் சட்டப்பூர்வமாக மாற்றப்படவில்லை என்று தகவல்கள் வருவதாகவும், இதற்காக ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார்.
9 மாகாணங்களுக்கு 9 தொலைபேசி எண்களை அறிமுகம்
அதன்படி, 9 மாகாணங்களுக்கு 9 தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அடையாளத்தைச் சரிபார்த்த பிறகு QR குறியீட்டைப் பெறத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிலரின் வாகனங்கள் தொடர்பான புத்தகம் சட்டப்பூர்வமாக மாற்றப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. அந்த நபர்களுக்காக, 9 மாகாணங்களுக்கு 9 எண்களை அனுப்ப இன்று மாலை நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்படி, நீங்கள் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதற்காக வாட்ஸ்அப் செய்தவுடன், நாங்கள் அந்தத் தரவைச் சரிபார்த்து உங்களுக்காக QR குறியீட்டினை மீண்டும் ஏற்பாடு செய்வோம்."
இவ்வாறான பின்னணியில், கோரப்பட்ட எரிபொருள் கையிருப்பு கிடைக்காததால் எரிபொருள் நிலையங்கள் இன்னும் மூடப்பட்டுள்ளதாகவும், கியூஆர் குறியீடு மூலம் வழங்கப்படும் ஒதுக்கீடு, வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் நள்ளிரவில் முடிவடைந்து, ஞாயிற்றுக்கிழமை மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வீட்டிற்கு வந்த மனைவியை பார்த்து பாண்டியன் சொன்ன வார்த்தை, ஷாக்கான கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கப்பலை அனுப்புவதாக சொல்லவில்லை... ட்ரம்பின் பேச்சுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த ஸ்டார்மர் News Lankasri