கோட்டாவை விட மிக மோசமான தலைவிதி ஜனாதிபதி அநுரவிற்கு.. ஹரின் பகிரங்க எச்சரிக்கை!
நாட்டின் உண்மையான நெருக்கடிகளை மறைத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழகிய கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பில் இன்று(18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.
பதவி விலகல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நெருக்கடி காலத்தில் தனது பதவியை விலகல் செய்துவிட்டுச் சென்றார்.
ஆனால், தற்போதைய ஜனாதிபதிக்குத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதவாறு தப்பியோட வேண்டிய நிலையே ஏற்படும். எதனையும் செய்ய முற்பட்டால் அது முதல் முயற்சியிலேயே படுதோல்வியில் முடிகின்றது.

பொருளாதார வீழ்ச்சிக்கு உலகப் போரே காரணம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்களை ஏமாற்றி வருகின்றார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெரும் போராட்டத்துக்கு மத்தியில் சேமித்து வைத்துவிட்டுச் சென்ற 6 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணி கையிருப்பு மாத்திரமே இன்று எஞ்சியுள்ள ஒரே பலம்.
அரசின் வாக்குறுதிகள்
அதனைத் தவிர இந்த அரசிடம் எந்தவொரு நிதி முகாமைத்துவ திட்டமும் இல்லை. தாங்கள் திருடவில்லை என இந்த அரசு கூறிவருவது வேடிக்கையானது.
இவர்கள் நாட்டுக்காக எந்தவொரு உருப்படியான வேலையையும் செய்யாததால்தான் திருடுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.

இந்த அரசு எதனைக் கையிலெடுத்தாலும் அதில் தோல்வியே மிஞ்சுகின்றது என்பதற்கு எரிவாயு விநியோகம் மற்றும் கியூ.ஆர். முறைமையே சாட்சி. நாட்டில் போதுமான அளவு எரிபொருள் உள்ளது என்றால் ஏன் இன்னும் வரிசைகள் காணப்படுகின்றன?
கப்பல்கள் வரிசையாக வரும் என்று பொய்க் கதைகளைக் கூறி வந்தவர்கள், இப்போது ஏதோ ஒரு நாளில் ஒரு கப்பல் வரும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் இன்று நகைச்சுவையாக மாறிவிட்டன என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த சில மணிநேரங்களில் - மிகப்பெரிய தாக்குதல்! குறிவைக்கப்பட்டுள்ள 5 முக்கிய எரிசக்தி நிலையங்கள் - IRGC அதிரடி உத்தரவு
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam