கிங்ஸ்பரி ஹோட்டலில் கஸ்ஸப தேரர்.. முகத்தையும் தலையையும் மூடியதன் பின்னணி என்ன!
பலாங்கொட கஸ்ஸப தேரர் வனவாசியாக(காட்டில் வசிக்கும் துறவி) இருப்பதால் ஹோட்டல் சூழல் அவருக்குப் பழக்கமில்லாத ஒன்று என்றும், அதனாலேயே அவர் தனது முகத்தையும் தலையையும் முழுமையாக மூடிக்கொண்டதாகவும் திட்டகல்லே ஆனந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கஸ்ஸப தேரரின் உடல்நிலை
ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி பல நாட்களாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரரின் உடல்நிலை தொடர்பில் சில தரப்பினர் எவ்வித அனுதாபமும் காட்டவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கஸ்ஸப தேரர் தனது சொந்தத் தேவைக்காகவோ அல்லது விகாரை ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவோ போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும், ஞானசார தேரருக்கு விடுதலை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே அவர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டதாகவும் ஆனந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும், பல நாட்களாக மழையில் நனைந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டதால் கஸ்ஸப தேரர் உடல்நலக் குறைவுக்கு உள்ளானதாகவும், இதனைக் கருத்திற்கொள்ளாமல் அவர் கிங்ஸ்பரி ஹோட்டலுக்குச் சென்று சிகிச்சை பெற்றதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சிலர் விமர்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வழங்கப்பட்ட தண்டனை
அத்துடன், முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர்கூட ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 711 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியபோது ஞானசார தேரருக்கு மட்டும் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விமர்சனங்கள் மற்றும் வெறுப்புணர்வுகள் காரணமாக நாடு வெறுப்பு நிறைந்த சமூகமாக மாறிவருவதாகவும் திட்டகல்லே ஆனந்தசிறி தேரர் கவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, உடல் வெப்பநிலை அதிகரித்து காய்ச்சல் ஏற்பட்டதால் ஓய்வெடுக்கவும் மருத்துவ சிகிச்சை பெறவும் ஹோட்டலுக்குச் சென்றதாக பலாங்கொட கஸ்ஸப தேரர் அண்மையில் விளக்கமளித்திருந்தார்.
காய்ச்சல் காரணமாகவே தனது முகத்தையும் தலையையும் முழுமையாக மூடிக்கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri