8 மில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது
சுமார் 8 மில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளரான காமினி கித்சிறி டயஸ் அமரவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ திரையரங்கிற்கு கதிரைகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் சம்பவம் தொடர்பில் காமினி கித்சிறி டயஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை பூர்த்தி செய்து குறைந்த விலையைக் கோரிய நிறுவனத்தைப் புறக்கணித்து, வேறு ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து கதிரைகளைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் அரசாங்கத்திற்கு 7,973,114.50 ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சுச் செயலாளர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் கொள்முதல் தீர்மானத்தின் மூலம் வெளிநபர் ஒருவருக்கு சட்டவிரோத நன்மை கிடைத்துள்ளதாகவும், இது ஊழல் குற்றத்தின்கீழ் வருவதாகவும் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri