மேய்ச்சல் தரை உரிமை கோரி போராட்டம்! எம்.பிக்கள் உட்பட11 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி கோரிய போராட்டத்தை முன்னின்று நடத்திய 11 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டு ஒன்றியத்தின் இணைப்பாளர் அருட்பணி லுக்ரோன் தெரிவித்துள்ளார்.
தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சிறிநாத் சிவில் சமூக செயற்பாட்டு ஒன்றியத் தலைவர் சிவயோகநாதன், பண்ணையாளர் சங்கத்தலைவர் நிமலன், விவசாயிகள் சம்மேளனத்தலைவர் மோகன் ஆகியோருக்கு எதிராகவே நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தடை உத்தரவை தொடர்ந்து குறித்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடைஉத்தரவு
இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியும் தமக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் பண்ணையாளர்களுக்கான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri