மயிலத்தமடு- மாதவனை பண்ணையாளர்களுக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பம்
புதிய இணைப்பு
மயிலத்தமடு- மாதவனை பண்ணையாளர்களுக்கான சரியான நீதியை தற்போதைய அரசாங்கமும், பொலிஸாரும் நிலைநாட்ட வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
அத்தோடு, பொலன்நறுவையில் உள்ள விவசாயிசாயிகளுக்க மட்டக்களப்பிலே காணிகளைக் கொடுக்காமல் அவர்களினுடைய பிரதேசத்திலே காணிகளைக் கொடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், அண்மையில், பண்ணையாளர் ஒருவரின் மாடு துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானமை குறித்து உடனடியாக விசாரிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு- மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் பண்ணையாளர்களுக்கு நீதி கோரியும், நீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்தக் கோரியும் போராட்டமொன்று முன்னெக்கப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டக்காரர்கள் தமது கண்டனத்தை வெளிப்படுத்தி மட்டக்களப்பு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சிறிநாத் மற்றும் வேலன் சுவாமிகள் ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் பண்ணையாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
தொடர் அச்சுறுத்தல்
அத்தோடு, மக்களின் கோரிக்கைக்கு தீர்வு தர வேண்டும், பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், அபிவிருத்தி குழுவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்து, மேய்ச்சல் தரை நிலம் எமக்கு வேண்டும், சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்று, மகாவலியே வெளியேறு என்ற கோசத்தை எழுப்பி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
சட்டவிரோதமாக மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனையில் குடியேறியவர்களால் பண்ணையாளர்களும், பசுக்களும் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மயிலத்தமடு பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக முன்னெடுக்கப்பட உள்ள போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுவின் தவிசாளர் கிருஷ்ணகோபால் திலகநாதன் அழைப்பு விடுத்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,மயிலத்தமடு பிரச்சினையைப் பொறுத்தவரையிலே இனவாதத்தைத் தூண்டுகின்ற வகையிலே, அதாவது தோல்வியடைந்த ஒரு அரசியல் கலாச்சாரத்துக்குள் இருக்கிறவர்கள் தங்கள் சுயலாப அரசியலுக்காக இந்த பிரச்சினையை மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கின்றார்கள்.
மயிலத்தமடு மாதவனை என்ற பிரச்சினையை அரசாங்கம் மிக சுமுகமாக இதனை எடுத்துச் செல்வதற்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் தற்போது செய்திருக்கின்றது.
ஆகவே பண்ணையாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல் இவற்றை சரியாக அவர்களுக்கு பெற்றுத்தருவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
























மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri