விமானத்தில் தாமதமாக வந்த பயண பொதி - புலனாய்வு தகவலில் சிக்கிய வெளிநாட்டவர்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ.49.4 மில்லியன் பெறுமதியான கொக்கேயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
64 வயதுடைய தென் கொரிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பயணப்பொதி
தொழிலால் தச்சுத்தொழிலாளியான குறித்த நபர், தாமதமாக வந்த தனது பயண பொதியை பெற்றுக்கொள்வதற்காக நவம்பர் 1ஆம் திகதி விமான நிலையத்திற்கு வந்தபோது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஒக்டோபர் 26ஆம் திகதி சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்திலிருந்து டுபாய் ஊடாக இலங்கை வந்துள்ளார்.
எனினும், அவர் பயணித்த விமானத்தில் அவரது பயணப் பொதி வராத நிலையில், பின்னர் மற்றொரு விமானம் மூலம் கட்டுநாயக்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் கண்காணிப்பில் ஈடுபட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், பயணப் பொதியைப் பெற்றுக்கொள்ள வந்த சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
YOU MAY LIKE THIS
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan