பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ் மா அதிபரின் எச்சரிக்கை
பொலிஸ் நிலையங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் துன்புறுத்தப்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பினையும் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்க வேண்டுமென பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தாக்கப்பட்டாலோ அல்லது துன்புறுத்தப்பட்டாலோ அதற்கான பூரண பொறுப்பினை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அல்லது பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏற்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
இனி வரும் காலங்களில் சந்தேக நபர்கள் தாக்குதலுக்கு உட்பட்டாலோ அல்லது துன்புறுத்தப்பட்டாலோ அது தொடர்பில் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பொலிஸ் மா அதிபர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
ஹோமகம பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர் ஓருவர் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பின்னணியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்படும் சந்தேக நபர்களை துன்புறுத்தவோ அல்லது தண்டிக்கவோ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri