நோர்வே செஸ் தொடரில் 7ஆவது முறையாக பட்டத்தை வென்ற கார்ல்சன்! நூலிழையில் தவறவிட்ட குகேஷ்
நோர்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் இறுதி சுற்று போட்டியில் கார்ல்சன் சிறப்பாக விளையாடி 7ஆவது முறையாக பட்டம் வென்றுள்ளார்.
நோர்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது.
7ஆவது முறை
நடப்பு உலக செம்பியனான தமிழக வீரர் குகேஷ் உட்பட 6 வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதில் அதிக புள்ளிகளை பெற்று முதல் இடம் பிடிக்கும் வீரர் வெற்றி பெற்றவராவார்.
இந்த நிலையில்,இறுதி சுற்று போட்டியில் கார்ல்சனை விட அதிக புள்ளிகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் பாபியானோ கருணாவை எதிர்த்து விளையாடிய குகேஷ் 3ஆவது இடத்தை பெற்றார்.
மனமுடைந்த குகேஷ்
இறுதி சுற்றில் குகேஷ் வெற்றி பெற்று இருந்தால் 3 புள்ளிகள் பெற்று 17.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருப்பார். பாபியானோ கருணா 2ஆவது இடத்தில் உள்ளார்.

10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதலிடமும், பாபியானோ கருணா 15.5 புள்ளிகளுடன் 2ஆவது இடமும், குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தில் உள்ளனர்.
நார்வே செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட குகேஷ் மனமுடைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan