மிக மோசமான நிலையில் நேட்டோ நாடுகளின் எதிர்காலம்! ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கையால் குழப்பத்தில் சீனா
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான கடல்வழிப்பாதையான Strait of Hormuz பாதுகாப்பை உறுதி செய்ய நேட்டோ நாடுகள் உதவாவிட்டால் அது NATO அமைப்பின் எதிர்காலத்திற்கு “மிக மோசமானது” என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காலம் வந்துவிட்டது..! உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்தவுள்ள உதய கம்மன்பில
ஏழு நாடுகளுடன் பேச்சுவார்த்தை
மேலும், அந்த கடல்சாலையை பாதுகாப்பதில் சீனா உதவும் என எதிர்பார்ப்பதாகவும், சீனா உதவ ஒப்புக்கொள்ளாவிட்டால் சீன தலைவர் Xi Jinping உடனான வரவிருக்கும் உச்சி மாநாட்டை தாமதப்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹோர்முஸை காவல் செய்ய சுமார் ஏழு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவர்கள் உதவவில்லை என்றால் அதை “நினைவில் வைத்துக் கொள்வேன்” என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.
இதற்கு முன், ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி, தாங்கள் போர் நிறுத்தத்தை கோரவில்லை என்றும், எங்களை தாக்க தீர்மானித்தபோது நாங்கள் அமெரிக்கர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தோம் அதனால் தற்போது அவர்களுடன் பேச வேண்டிய காரணம் எதுவும் இல்லை” என்றும் தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான இலக்குகள்
இதற்கிடையில், இஸ்ரேல், ஈரானில் இன்னும் “ஆயிரக்கணக்கான இலக்குகள்” தாக்கப்பட வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளது.

மேற்குப் பகுதி மற்றும் மத்தியப் பகுதிகளில் தாக்குதல்களை விரிவுபடுத்துவதாக அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.