அநுரவால் நியமிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர..
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அநுரகுமார உள்ளிட்ட தரப்பினர் ஊழல் ஒழிப்பு தொடர்பான ஏதோ ஒரு அமைப்பில் அங்கம் வகித்தனர் என தெரிவித்துள்ளார்.
ஊழலை ஒழிக்க பதவிக்கு வந்த பூஜித்
ஊழல்களை ஒழிப்பதற்கு எங்களுக்கு இந்த பொலிஸ்மா அதிபர் தான் தேவை என்று பூஜித் ஜயசுதந்தரவை, அனுரகுமாரா தரப்பினரே பரிந்துரை செய்தனர் என தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை வீதியில் கண்டால் இதனை நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் விமல் வீரவன்ச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கோரிக்கைக்கு இணங்கவே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு பூஜித் ஜயசுந்தரவடன் எந்த விதமான தொடர்பும் கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பூஜித் பொாலிஸ் மா அதிபராக கடமை ஆற்றிய காலப்பகுதியில் போலி கடவுச்சீட்டு விவகாரம் ஒன்றில் தம்மை சிக்க செய்தவர்கள் அந்த குற்றச்சாட்டுகளில் நான் குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்திருந்தது எனவும் அதனால் அவருக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்புகளும் கிடையாது எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri