பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டம்! விராட் கோஹ்லிக்கு எதிராக முறைப்பாடு
ரோயல் சேலன்ஜர்ஸ் பெங்களூரு அணி வெற்றிப்பெற்றதையடுத்து நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ள நிலையில் விராட் கோலிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில்பெங்களூரு அணி வெற்றி பெற்று முதல் முறையாக செம்பியன் பட்டத்தை வென்றது.
விராட் கோலி
இதையடுத்து, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே வெற்றிக்கொண்டாட்டம் இடம்பெற்றது.
கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
அதனையடுத்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கெப்பன் பார்க் பொலிஸ் நிலையத்தில் ஏ.எம்.வெங்கடேஷ் என்பவர் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலிக்கு எதிராக முறைபாடளித்துள்ளார்.
விசாரணை
அதனை ஏற்றுக் கொண்ட பொலிஸார் இந்த விவகாரத்தில், முன்பே பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். உடன் சேர்த்து, விசாரணை நடத்த பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். இருப்பினும், விராட் கோஹ்லிக்கு எதிராக இதுவரை எவ்விதமான FIR ம் பதிவு செய்யப்படவில்லை.
இதேவேளை, ரோயல் சேலன்ஜர்ஸ் பெங்களூரு அணியின் அதிகாரி நிகில் சொசலே மற்றும் மூன்று நிகழ்வு முகவர்கள் நேற்றையதினம்(6) திகதி கெம்பேகௌடா விமான நிலையத்தில் கெப்பன் பார்க் பொலிஸ், மத்திய குற்றப்பிரிவும் இணைந்து நடத்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், இன்று (7 )பெங்களூரு நீதிமன்றம் அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
