2 கோடி பின்தொடர்பவர்கள்! ஆர்சிபி அணி படைத்த சாதனை
10 அணிகள் இடையிலான 18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் (இன்ஸ்டாகிராம், எக்ஸ்) புகைப்படங்கள், காணொளிகளை பதிவிட்டு வருகின்றன.
ஆர்சிபி சாதனை
இதன்காரணமாக அணிகளின் சமூக வலைத்தள பக்கங்களை ரசிகர்கள் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை ரோயல்ஸ் சேலன்ஜர்ஸ் பெங்களுரு அணி படைத்துள்ளது.
அந்த அணிக்கு அடுத்தபடியாக 18.6 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் சிஎஸ்கே அணி 2ஆவது இடத்திலும், 18 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 11 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri