1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்...

Sri Lankan Tamils Ministry of Defense Sri Lanka Crime Black Day for Tamils of Sri Lanka History of Sri Lanka
By Thiva Jul 25, 2026 11:40 AM GMT
Report

இலங்கைத்தீவில் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு தாக்குதல் என்பது சடுதியாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று அல்ல.

அது நீண்ட திட்டமிடலோடும், இன விரோதத்தோடும், தமிழர்களின் பொருளாதாரத்தை கொழும்பில் இல்லாது ஒழிக்கவும், பொருளாதார இலக்குகளை சிங்களவர்கள் கைப்பற்றுவதற்குமான ஒரு நீண்டகால தொடர் இனவிரோத செயல்முறையின் ஒட்டுமொத்த திரட்சியின் வடிவமே ஆகும்.

தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி கோர விபத்து - 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி

தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி கோர விபத்து - 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கறுப்பு ஜூலை படுகொலை

ஆனால் யாழ் திருநெல்வேலியில் ஜூலை 23ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பினர் மேற்கொண்ட கண்ணிவெடி தாக்குதலில் 13 சிங்கள படையினர் கொல்லப்பட்டமை என்பது அந்த இனப்படுகொலையை ஆரம்பிப்பதற்கான உடனடி காரணமாக அமைந்துவிட்டது.

கறுப்பு ஜூலை படுகொலை என்பது கொழும்பில்தான் ஆரம்பித்தது என நம்மவர்கள் வரலாற்றை பதிவு செய்ய முற்படுகின்றனர். ஆனால் உண்மையில் அந்த ஜூலை படுகொலை யாழ்ப்பாணத்திலேயே ஆரம்பமானது என்பதுதான் உண்மை.

1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... | Commemorate July 1983 Genocide

ஜூலை 23ஆம் திகதி நள்ளிரவு திருநெல்வேலியில் 13 படையினர் கொல்லப்பட்டதை அடுத்து 24ஆம் திகதி அதிகாலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள படைமுகாம்களில் இருந்து இராணுவ கவச வண்டிகளில் வந்த படையினர் மக்கள் மீது சரமாரியாக சுட்டு படுகொலை தாக்குதலை ஆரம்பித்தனர்.

இதில் மானிப்பாய் - சுண்ணாகம் வீதியில் வந்துகொண்டிருந்த பேருந்தையும் இராணுவத்தினர் சுட்டனர். இதில் பல்கலைக்கழக சமூகத்தினால் வெளியிடும் மாதாந்தப் பத்திரிகையான மனிதம் பத்திரிகையின் ஆசிரியர் விமலதாஸ் கொல்லப்பட்டார்.

அத்துடன் இலக்கியவாதி கலா.பரமேஸ்வரன் பலாலி வீதியில் அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டார். மேலும் காரைநகரிலிருந்து வந்த பேரூந்தினை மறித்து அதில் வந்த 13 பேரை நிரையில் நிற்கவைத்து 12 பேரைக் சுட்டுக்கொன்றனர்.

தமிழர் இனப்படுலை

இதில் ஒருவர் ஓடித்தப்பி லண்டனில் வாழ்கிறார். இவ்வாறு ஜூலை 24ஆம் திகதி யாழில் மொத்தமாக 51 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பதை பெயர் பட்டியலுடன் TRRO எனப்படும் தொண்டர் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

திருநெல்வேலி தாக்குதலில் கொல்லப்பட்ட 13 படைவீரர்களும் சிங்கள தேசத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் ஜே.ஆர். அரசாங்கம் கொழும்பு - பொரளையில் அவர்களுக்கான இறுதிக் கிரியைகளை 24ஆம் திகதி செய்யத் திட்டமிட்டதே கொழும்பில் உள்ள தமிழர்கள் மீது இனவழிப்பு செய்வதற்காகத் தான்.

1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... | Commemorate July 1983 Genocide

படையினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக வன்முறைகளைச் செய்யக் கூடிய காடையர்கள் சிங்கள தேசத்தின் பல பகுதிகளிலும் இருந்து கொண்டுவரப்பட்டு கொழும்பில் விடப்பட்டிருந்தனர்.

அன்று அது ஒரு எசல பௌர்ணமி நாள். பொரளை கனத்தை மயானத்தில் 13 படையினரது தகனக் கிரியை முடிந்ததும் தமிழர்களுக்கெதிரான படுகொலை அரங்கேறத் தொடங்கியது.

அன்றைய காலகட்டத்தில் இலங்கையின் பொலிஸ்மா அதிபராக ருத்திரா ராஜசிங்கம் எனும் தமிழர் இருந்தார். அவர் கொலை வெறித்தாக்குதலுக்கான முஸ்திப்புகளின் விபரீதத்தை உணர்ந்து அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் வதிவிடத்திற்கு நேரே சென்று ஊரடங்குச் சட்டம் பிரகடனம் செய்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உத்தரவு கேட்டார்.

கொலைவெறித் தாக்குதல்

ஜே. ஆர் அதற்குச் சம்மதிக்கவில்லை. மாறாக “சிங்கள மக்கள் அவர்களின் மனவுணர்வை வெளிப்படுத்தட்டும்“ என்று கூறி மறுத்துவிட்டார்.

இதன் விளைவாக நாடெங்கும் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட இனப்படுகொலைகள் வேகமாக பரவியது. இதற்கு ஜே. ஆர். ஜெயர்த்தனாவின் வலது, இடது கரங்களாக செயல்பட்ட சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க ஆகியோர் பிரதான சூத்திரதாரிகளாக வீதிகளில் வந்து நின்று தலைமை தாங்கினர்.

1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... | Commemorate July 1983 Genocide

இந்த தாக்குதல்களின் இலக்கு பெரும்பாலும் தமிழர்களுடைய பொருளாதார இலக்குகளான வியாபார தளங்கள் மீதும், தொழிற்சாலைகள் மீதும் நடத்தப்பட்டது. அவை தீயிட்டு அழிக்கப்பட்டன. வீதிகளில் நடமாடிய தமிழர்கள் அடித்துக் கொல்லப்பட்டார்கள். கொழும்பு நகரப்புறங்களில் தமிழர்களின் வீடுகள் தேடித்தேடி தீக்கிரையாக்கப்பட்டன.

இந்தக் கொலைவெறித் தாக்குதல்களினால் 3000க்கு அதிகமான தமிழர்கள் தென்னிலங்கையில் கொல்லப்பட்டார்கள். ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டார்கள்.

அதே சமயம் ஜூலை 25 மற்றும் 27 ஆகிய திகதிகளில் கொழும்பு வெலிக்கடைச் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.

மரண தண்டனை தீர்ப்பு 

குட்டிமணி,ஜெகன், தங்கத்துரை ஆகியோருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கிய போது இறுதி ஆசை என்னவென்று கேட்கப்பட்டது. அப்போது குட்டிமணி தனது கண்களைத் தமிழ் மகன் ஒருவனுக்குத் தானமாக வழங்குங்கள். மலரப் போகும் தமிழீழத்தை அதனூடாகப் பார்ப்பேன் என்றார்.

அதனால் அவரது கண்கள் தோண்டப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலையின் சாட்சியாக டக்ளஸ் தேவானந்தா மற்றும் விரிவுரையாளர் நித்தியானந்தன் போன்றவர்கள் தற்போதும் உயிருடன் உள்ளார்கள்.

1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... | Commemorate July 1983 Genocide

அதேவேளை வெளிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் சடலங்கள் இரகசியமாக கொழும்பு பொரளை மயானத்தில் 10அடி ஆழத்தில் வெட்டப்பட்ட மூன்று புதைகுழிகளுக்குள் ஐம்பத்து மூன்று உடலங்களும் புதைக்கப்பட்டன.

இதனை 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொரளை மயானத்தின் இரவு காவல் பணியாளராக பணியாற்றிய அனிஸ் துவான் என்பவர் 2016ஆம் ஆண்டில் சுமார் 33 வருடங்களுக்கு பின்னர் உண்மையின் சாட்சியமாக வாய்திறந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் ஒரு நடுஇரவில் பொரளை மயானத்தில் இராணுவ வண்டிகளில் வந்திறங்கிய இராணுவ வீரர்கள் கனரக மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் பத்து அடி ஆழமுள்ள குழிகளை வெட்டினார்கள்.

வீட்டிலிருந்து காணாமல்போயிருந்த மாணவி கல்குவாரியிலிருந்து சடலமாக மீட்பு - தொடரும் மர்மம்

வீட்டிலிருந்து காணாமல்போயிருந்த மாணவி கல்குவாரியிலிருந்து சடலமாக மீட்பு - தொடரும் மர்மம்

தமிழீழ விடுதலை முன்னோடிகள்

மூடப்பட்ட இராணுவ வண்டியில் கொண்டு வரப்பட்ட 35 ஆண்களுடைய உடலங்களை அதில் புதைத்தனர். அது சம்பந்தமாக மயானத்தின் மேலாளர் கொழும்பு மாநகர மேயருக்கு அறிவித்தபோது “இராணுவத்தினரை தடுக்க வேண்டாம். அதனை அவர்கள் செய்து முடிக்க அனுமதியுங்கள் என கொழும்பு மாநகர மேயர் உத்தரவிட்டார்“ என்றும் அனிஸ் துவான் என்ற அந்த மயான காவலாளி தெரிவித்துள்ளார்.

மறுநாள் மேலும் 18 ஆண்களுடைய உடலங்களை இராணுவத்தினர் கொண்டுவந்து நடு இரவில் புதைத்தனர்" எனவும் தெரிவித்தார். 1983ஆம்ஆண்டில் வெலிக்கட சிறைச்சாலையில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளான தங்கதுரை, குட்டிமணி, ஜெகன், ராஜசுந்தரம், தேவன், சிவபாதம் மாஸ்டர் உட்பட 53 தமிழர்களுடைய உடலங்கள் அவர்களது குடும்பங்களுக்கோ, அவர்களது அன்புக்கு உரியவர்களுக்கோ எந்தவொரு அறிவிப்பும் செய்யாது சிங்கள அரசு புதைத்துள்ளது.

1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... | Commemorate July 1983 Genocide

இது சம்மந்தமான எந்தவித அறிவிப்பையும் அரசு செய்யாமல் இருப்பது மனித உரிமை மீறலும், போர்க்குற்றமுமாகும். இப்போது அவர்களின் புதைகுழிக்கு மேலாக கார் தரிப்பிடம் ஒன்றையும் அமைத்துவிட்டார்கள்.

சிங்களதேசத்தின் தலைநகரத்தில் தினமும் இலட்சக் கணக்கான மக்கள் கடந்து போகும் ஒரு சுறுசுறுப்பான பகுதியில் நிலத்துக்கு கீழே எங்கள் தேசத்தின் வீரப் புதல்வர்களான தமிழீழ விடுதலை முன்னோடிகள் புதைத்துவிட்டு மறைக்கப்பட்ட கிடக்கிறார்கள்.

இன்றுவரை வெலிக்கட சிறையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்கள் யாரும் எதுவிதமான கவலையோ, கண்டனமோ, மன்னிப்போ கோரவில்லை. அது மட்டுமின்றி வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்டவர்களை மிகவும் கவனமாக திட்டமிட்டு அவர்கள் புதைக்கப்பட்ட இடங்களை தெரியப்படுத்தாது மறைத்துவருகின்றனர்.

நினைவுச் சின்னங்கள்

அவர்கள் சார்ந்த நினைவுச் சின்னங்களை கட்டவிடாது தடுத்து தமிழ் மக்களின் கூட்டுணர்வையும், நினைவு வணக்கங்களையும் செய்ய முடியாமல் தடுத்து வருகின்றது.

அதன் ஒரு பகுதிதான் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் நினைவுச் சின்னங்கள் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட நிலையில் அதனை திறந்து வைக்க முடியாமல் சிங்கள பொரிஸார் தடுத்திருக்கின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... | Commemorate July 1983 Genocide

இங்கே குட்டிமணி, தங்கதுரை ஆகிய இருவரது நினைவு சின்னங்களையும் திறக்க விடாமல் தடுத்திருக்கும் அதே நேரத்தில் உமாமகேஸ்வரன், பத்மநாபா, குகன் போன்றவர்களுடைய சிலைகள் வவுனியாவில் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அதற்கு இலங்கை அரசு தரப்பு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியது. ஏனெனில் அவர்கள் தமிழர்களாலே கொல்லப்பட்டதனால் அவர்களுடைய சிலைகளை திறப்பதற்கு எந்தத் தடையையும் சிங்களதேசம் விதிக்கவில்லை.

ஆனால் சிங்களவர்களால் கொல்லப்பட்ட விடுதலைக்கான முன்னோடிகளின் நினைவுச் சின்னங்களை உருவாக்குவதை அரசு தடுக்கிறது என்பதிலிருந்து இலங்கை அரசு தமிழ் மக்களை எவ்வாறு ஒடுக்கவும், அடக்கவும், பிளவுபடுத்தவும், இல்லாத ஒழிக்கவும் சாதுரியமாக செயல்படுவதை தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

சிங்கள தேசத்தின் உயிர் அச்சுருத்தல்

இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்வதற்கும், தமக்கான சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கும், அதனுடாக தாம் இழந்துபோன இறைமையை மீட்டெடுப்பதற்குமான தொடர் போராட்டத்தில் தமது இழப்புக்களையும், தமக்கு ஏற்பட்ட அவலங்களையும் நினைவு கூர்வதும் அதன் மூலமாக ஒரு கூட்டு மன உணர்வுடன் ஐக்கியப்படவும், ஒற்றுமைப்படுவதற்குமான இடமாக நினைவுச் சின்னங்களும், நினைவு மண்டபங்களும் பேருதவி புரியும்.

அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தமது வலிகளை, மனக்காயங்களை, உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் ஜூலை இனப்படுகொலையை நினைவு கூறும் நினைவு சின்னங்கள் வரலாற்று உணர்வோடு அமைக்கப்பட வேண்டியது அவசியமானது.

1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... | Commemorate July 1983 Genocide

தமிழ் மக்களுடைய நினைவுச் சின்னங்களை சிங்கள தேசத்தில் அமைக்க முடியாது. ஆகவே 1983 ஜூலை இனப்படுகொலை நினைவுச் சின்னங்கள் தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட முடியும்.

உதாரணமாக சிங்கள தேசத்தின் உயிர் அச்சுறுத்தலினால் அகதிகளாக்கப்பட்டு தமிழர் தாயகத்திற்கு கப்பல் வழியாக காங்கேசன்துறைக்கு அனுப்பப்பட்ட தமிழர்கள் காங்கேசன்துறையில் தங்கவைக்கப்பட்ட இடத்திலோ, அல்லது அதற்கு அண்மித்த இடங்களிலோ வரலாற்று உணர்வோடு அகதியாக வந்து இறங்கிய நினைவைத் தாங்கிய நினைவுச் சின்னத்தை கட்டுவது அவசியமானது.

அத்தகைய நினைவுச் சின்னங்கள்தான் எதிர்காலத்தில் எமது சந்ததிக்கு வழிகாட்டியாக அமையும். அதேபோல தென்னிலங்கையில் இருந்து ஏராளமான மலையகத் தமிழர்கள் தென்னிலங்கையில் வாழமுடியாது என பயந்து உயிருக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய தமிழர் தாயகத்தில் வந்திறங்கி ஏ9 வீதியில் ஓமந்தை, புளியங்குளம், கனராயன்குளம், முறிகண்டி, இரணமடிச் சந்தி, மற்றும் தர்மபுரம், நெடுங்கேணி ஆகிய இடங்களில் அகதிகளாக தங்கி இருந்தனர்.

தமிழ் மக்களின் வரலாறு

பின்னாளில் அந்த இடங்களில் அவர்கள் குடியேறினர். அந்த இடங்களில் ஜூலை அவலத்தை குறிக்கின்ற நினைவுச் சின்னங்கள் கட்டப்பட வேண்டும். அது எங்களின் அடுத்த சந்ததிக்கு வரலாற்றைக் கடத்துவதற்கான இலகுவான வழியாகவும் அமையும்.

அந்த அடிப்படையில்தான் இப்போது குட்டிமணி, தங்கதுரை ஆகியோருடைய நினைவு சின்னங்கள் வல்வட்டித் துறையில் அமைக்கப்பட்டன. அதேபோல ஏனையவர்களுடைய பிறந்த இடங்களிலும் வெளிக்கடை சிறையிலே கொல்லப்பட்ட தமிழர் தேசத்தின் மைந்தர்களுக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியமானது.

1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... | Commemorate July 1983 Genocide

இந்தக் கூட்டு மனவுணர்வும், வரலாற்று உணர்வுமே ஒரு இனத்தை வழிநடத்த வல்லது. அந்த அடிப்படையில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவுத்தூபி தமிழர் தாயகம் எங்கும் அமைக்கப்படுவது அவசியமானது.

அதுவே தமிழ் மக்களை ஒன்று திரட்டவும், ஐக்கியப்படுத்தவும், ஒருங்கிணைப்பதற்குமான வழியாகவும் அமையும். அதுவே தமிழ் மக்களின் வரலாற்றை காவிச் செல்வதற்கான உந்து சக்தியாகவும், அமையும். 

இந்தியாவில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - பதவி விலகிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

இந்தியாவில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - பதவி விலகிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thiva அவரால் எழுதப்பட்டு, 25 July, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US