குவைத்தில் இரண்டு இலங்கையர்கள் கைது
குவைத் நாட்டின் சல்மியா நகரில் போதைப் பொருட்களைத் தம் வசம் வைத்திருந்த இரண்டு இலங்கையர்கள் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 37 போதைப் பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களில் ஒருவர் தப்பியோட முயற்சி
சம்பவம் தொடர்பில் குவைத் உள்துறை நேற்று (08|09|26) வெளியிட்டுள்ள செய்தியில், ஹவாலி ஆளுநரக பாதுகாப்பு பணியகத்தின் ரோந்துப்படை சார்பில், அப்பகுதியில் வழக்கமான சோதனை பணிகளை மேற்கொண்டிருந்த போது இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் இந்த இருவரையும் ஒரு திறந்த வெளியில் எதையோ தேண்டிக்கொண்டிருப்பதை கண்டுள்ளனர்.
இந்த விசாரணைக்காக பொலிஸார் அவர்களை அணுகியபோது சந்தேகநபர்களில் ஒருவர் தப்பியோட முயன்ற போது பொலிஸார் துரத்தி பிடித்து கைது செய்துள்ளனர்.
சட்ட நடவடிக்கை
இதனைத்தொடர்ந்து இரு நபர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் மொத்தம் 37 பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றில், முதல் நபரிடமிருந்து 27 பொதிகளும், இரண்டாவது நபரிடமிருந்து 10 பொதிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் கூடுதல் சட்ட நடவடிக்கைக்காக இருவரும் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சரின் செயலாளர் கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர் சி.ஐ.டியினரால் கைது
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24