எயார்பஸ் வழக்கு விசாரணை! இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளுக்கு நீதவான் கடும் உத்தரவு
ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான வழக்கு இன்று (08) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போதே வழக்கின் விசாரணை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கத் தவறிய இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை நீதவான் அசங்க எஸ் போதரகம கடுமையாக கண்டித்துள்ளார்.
கடுமையான உத்தரவு
இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள், வழக்கு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், விசாரணைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை என்றும் வாய்மூலமாக நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

அதன்போது கடுமையாக ஆத்திரமுற்ற நீதவான் அசங்க எஸ். போதரகம, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு தனியான சட்டங்களோ அதிகாரங்களோ இல்லை என்றும், நீதிமன்றத்தின் முன்னர் குறித்த ஆணைக்குழுவும் பொறுப்புக் கூறும் கடமைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் வழக்கொன்றின் விசாரணையின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஒவ்வொரு தவணையின் போதும் எழுத்து மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டியது பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து விசாரணையளார்களின் பொறுப்பாகும் என்றும் கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் அவ்வாறான விசாரணை அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி நீதிமன்றத்தில் முன்னிலையாகும் அதிகாரிகள் வழக்கு விசாரணை தொடர்பான முழுமையான விபரங்களை அறிந்து கொண்டே நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் அவர் கடுமையான உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.
[AA0DO6Hஸ