அச்சத்தில் நாமலின் மனைவி! ரங்க திஸாநாயக்காவால் திணறும் மகிந்த குடும்பம்
ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தினரிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளராக ரங்க திஸாநாயக்க பதவியேற்ற பின்னர், விசாரணைகளில் அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அவர் பதவியேற்றபோது சுமார் 8,000 வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும், தற்போது அவற்றில் 44 சதவீதமான வழக்குகள் முடிவுறும் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 29-க்கும் மேற்பட்ட வழக்குகள் ராஜபக்ச குடும்பத்தினருடன் தொடர்புடையவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'சிரிலிய சவ்வியா' அமைப்பு மற்றும் மகரகம அபேக்ஷா வைத்தியசாலை தொடர்பான நிதி விவகாரங்கள் குறித்து குற்றத்தடுப்பு புலனாய்வுத் துறையினர் (CID) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக ராஜபக்ச குடும்பத்தின் பல உறுப்பினர்கள் சட்ட ரீதியான விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, குடும்பம் கடும் நெருக்கடியை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் அவரது இல்லாத குறையை ஈடுசெய்யும் வகையில், லிமினி ராஜபக்சவை அரசியல் களத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிமினி ராஜபக்ச மீது பல்வேறு அவதூறுகள் பரப்பப்படுவதாகவும், இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
பெரும் தாக்குதல் வரப்போகிறது...ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு முன்னரே நெதன்யாகுவுக்கு நேரடியாக தகவல் வழங்கிய UAE ஜனாதிபதி