பெருந்தொகை தேயிலைத் தோட்டங்களை சொந்தமாக முயற்சித்த முன்னாள் ஜனாதிபதியின் பிள்ளைகள்
தேயிலைத் தோட்டத்தை தமக்கு சொந்தமாக்கிக் கொள்ள நடவடிக்கை எடுத்த முன்னாள் ஜனாதிபதியின் இரண்டு மகன்களுக்கு எதிராக விசாரணையை ஆரம்பிக்க, குற்றப் புலனாய்வு தீர்மானித்துள்ளது.
குறித்த இருவரும் மூன்று வர்த்தகர்களை பயன்படுத்தி 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை சொந்தமாக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஊழல், மோசடி
இந்த மோசடி தொடர்பில் ஊழல், மோசடி மற்றும் வீண்விரையத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பின் தலைவர் ஜாமுனி சமந்த துஷார என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டிற்கு அமைவாகவே இந்தப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் இது தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக எதிர்வரும் 14 ஆம் திகதி முன்னிலையாகுமாறு ஜாமுனி சமந்த துஷாரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.