2028 இல் இலங்கைக்கு ஆபத்தா.. நாமலை காப்பாற்ற புது வியூகம்
2022 ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையில் (பொதுக்கடன், அந்நியச் செலாவணி பற்றாக்குறை) தற்போது நாடு இல்லை. இலங்கை ஒரு மீட்சிப் பாதையில் நகர்வதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம். கணேசமூர்த்தி தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த 2028 ஆம் ஆண்டுக்கான எச்சரிக்கை விடுத்திருந்தார். இலங்கையின் பொருளாதார நிலை என்பது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளை முறையாகப் பூர்த்தி செய்வதிலும், சட்டப்பூர்வமாக டொலர் வருமானத்தை ஈட்டுவதிலும், அந்நியச் செலாவணியைக் கட்டுப்படுத்துவதிலும் தங்கியுள்ளது.
2027-2028 காலகட்டத்திற்குப் பிறகு, பழையபடி மானியங்களை வழங்குதல் அல்லது வரி வருமானத்தைக் குறைத்தல் போன்ற தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு அரசு திரும்புவது மட்டுமே ஆபத்தை ஏற்படுத்தும்.
மேலும், நாமல் ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல, மாறாக சட்ட ரீதியான நடைமுறையாகும்.
எதிர்க்கட்சிகள் இதனை 'அரசியல் பழிவாங்கல்' என்று கூறுவது மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ளும் ஒரு இலகுவான முயற்சியே தவிர, அது சட்ட ரீதியான குற்றச்சாட்டு அல்ல என்று தெரிவித்தார்.
இந்தவிடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..